Tuesday, January 10, 2012

போகியை கொண்டாடுவோம்



நன்மையை நாடும்  நெஞ்சங்களே 
நச்சு  புகையை  உண்டாக்காத  
போகியை  கொண்டாடுவோம்

ஒரு பண்டிகையை கொண்டாட
முதலில் வீட்டை சுத்தம் 
செய்ய வேண்டும்
.
ஆண்டின் முதல் பண்டிகை
பொங்கல் பண்டிகை 
அதை கொண்டாடும் முன் முதல்
 நாள் போகி தினம் 
அந்நாளில் அனுசரிக்கப்பட்டது

அந்நாளில் வீட்டு குப்பைகள் என்பது, 
பிரம்பினால் செய்யப்பட்ட முறம், 
கூடை, துடைப்பம் போன்றவைகளே
அத்தோடு கூட வீட்டை சுற்றி 
வளர்ந்துள்ள சிறு முட்செடிகள் 
உடைந்த மர சாமான்கள்  போன்றவற்றை
அப்புறபடுத்தி நன்றாக உலற வைத்து அத்தோடு 
பழைய  கிழிந்த பருத்தி துணிகளையும் சேர்த்து 
அதிகாலையில் எரித்து சாம்பலாக்குவார்கள்
 
அவைகளில்   ரசாயன கலந்த எந்த பொருட்களும் 
அக்காலத்தில் இல்லாமையால். சுற்றுபுரத்திற்கு
 எந்த பாதிப்பும் இல்லை

ஆனால் இன்று உண்ணும் உணவில் 
ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகளின் 
கலவை, குடிக்கும் பாலில் நச்சு,
 குடிநீரில்கிருமி நாசினிகள்  
சமைக்கும் பாத்திரங்களில் உலோக நச்சு 
பயன்படுத்தும் அழியா வரம் பெற்ற பிளாஸ்டிக் ,
பயணம் செய்ய பயன்படுத்தும் சைக்கிள் முதல்
 கார் லாரி வரை அனைத்திலும் பயன்படும் ரப்பர் 
இதை தவிர நாம் உணவுக்கு அதிகமாக
 உட்கொள்ளும் மாத்திரைகள் என 
அனைத்தும் நஞ்சாக உள்ளது.

வாகனங்கள் விடும் புகை, வல்லரசுகள் 
உலகம் முழுவதும் வெடித்து மக்களை கொல்லும் 
வெடிகுண்டுகளிலிருந்து வரும் நச்சு புகை ,
ரசாயன ஆயுதங்கள் என ரசாயன 
தொழிற்சாலைகள்  விடும் நச்சு கழிவுகள்
அணு உலை கழிவுகள்  ,
 நச்சு புகைகள் என மனிதர்கள் 
தங்கள் இனத்தின் மீது செய்யும் 
அக்கிரமங்கள் அளவற்றது

கலாச்சாரத்தை அப்படியே நடைமுறை படுத்துகிறோம் 
என்று இன்றைய சமுதாயம் தம்மை தாமே 
சீரழிப்பது  கண்டிக்கத்தக்கது

ஒரு பண்டிகையை கொண்டாடும்போது 
தானும் இன்புறவேண்டும் பிறரும்
இன்புறவேண்டும் அதுதான் பண்டிகை
அதை விடுத்தது தன்னை மட்டும் பற்றி சிந்தித்து
 மற்றவர்கள் நம்மை நிந்திக்கும் அளவிற்கு
நடந்துகொள்வது நாகரீகமற்ற செயல் 
எனவே அனைத்து மக்களின் நல வாழ்வை மனதில் கொண்டு
இந்த போகியை மக்கள் எரித்து கொண்டாடாமல் 
எரியும் விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடட்டும்

நச்சு புகையை விட்டு அனைவரையும் துன்புறுத்தாமல்
நறுமலர் அலங்காரம் செய்து கொண்டாடட்டும்

வீட்டையும் ஊரையும் சுத்தபடுதுகிறேன் என்று
 பிளாஸ்டிக்கையும்  டயர்களையும் எரித்து 
சுற்றுப்புறத்தையும் காற்றையும் மாசு படுத்தும் 
தற்கால கண்மூடிபழக்கம் 
மண் மூடி போகவேண்டும் 

ஆனால்என்ன பட்டும் திருந்தாத பல  ஜென்மங்கள் 
இந்த உலகத்தில் இருக்கும் வரை 
அவர்கள் காதில் இந்த கூக்குரல் விழுமா என்பது
கேள்விக்குறியே 

No comments:

Post a Comment