குழந்தை
என்ன பாவம் செய்தது.?
இந்திய நாடு வெள்ளையர்களின்
ஆதிக்கத்திலிருந்து 1947ல் சுதந்திரம்
அடைந்ததாக் நம்பிகொண்டிருக்கிறோம்
ஆனால் 65 ஆண்டுகள் கழிந்த பின்னும்
அரசின் கருப்பு சட்டங்களினால்
கொடுமைக்கு உள்ளாகும்
பழங்குடியினரை காக்க எந்த
அரசுகளும் தயாராக இல்லை
என்பதுதான் கசப்பான
வேதனை தரும் உண்மை.
நாம் விண்ணில்
ஏவுகணைகளை விட்டு
உலக நாடுகளை
அசத்தியிருக்கலாம்
இன்னும் பல விஷயங்களில்.
கற்காலத்திர்க்கும் முந்தய காலாமான
காட்டாட்சி தர்பாரைதான்
இன்றும் கண்டுகொண்டு இருக்கிறோம்
கீழே உள்ள இந்த படத்தை காணுங்கள்
இதில் உள்ள குழந்தை
என்ன பாவம் செய்தது.?
பாரத மண்ணில் பிறந்ததா?
அல்லது சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்ததா?
அதுவும் காட்டு பகுதியில் வசிக்கும்
ஆதிவாசியின் பெற்றோர்களுக்கு பிறந்ததா?
சட்டீஸ்கர் அரசு
ஆதிவாசிகள் வன விலங்குகளுக்கு
இடையூறாக இருப்பதாக கருதி
30 குடிசைகளை
இடித்து தள்ளிவிட்டது.
வன பாதுகாப்பு சட்டம் கூறும்
விதிகளை காட்டி.
(செய்தி ஹிந்து நாளிதழ்-28.2.2013 )
இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லை
இதுபோன்று மனிதாபிமானமற்ற அத்துமீறல்கள்
ஆதிவாசிகள் மீது இன்று நம்
நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன.
கேட்பார் யாருமில்லை.
கேட்பவர்கள். அடித்து
நொறுக்கப்படுகிறார்கள்
உண்மையில் காட்டு விலங்குகளை
வேட்டையாடி அழிக்கும் கூட்டம்
நாட்டில்தான் தைரியமாக உலவுகின்றன
பல நிலைகளில் செல்வாக்கோடு
நாட்டின் பூர்வீக குடிகளான
காடுகளில் இயற்கையோடு இயற்கையாய்
வாழும் குழந்தைகளான
உண்மையானஆதிவாசிகளின் வாழ்வு
மேம்பட்டால்தான்
நம் நாடு சுதந்திரம் கிடைத்ததாக
கொள்ளமுடியும்.