Thursday, September 5, 2013

இந்த பூமி வேற்றுலக சக்திகளின் கொத்தடிமைக் கூடம் (Part-2)


இந்த பூமி வேற்றுலக சக்திகளின் கொத்தடிமைக் கூடம் (Part-2)

இந்த பூமி வேற்றுலக சக்திகளின் 
கொத்தடிமைக் கூடம் (Part-2)

இந்த உலகத்தையும் இந்த உலகில் உள்ள
உயிரினங்களையும் உலகம் தோன்றிய நாள்முதல்
ஆண்டு வருவது வேற்றுலக சக்திகளே

இந்த பிரபஞ்சத்தில் மனித இனத்தைபோல்
அறிவுள்ள, உயிரினங்கள் எங்கும் கிடையாது.

இங்குள்ளதைபோல் வளங்களும்,
வசதிகளும் எங்கும் கிடையாது.

எல்லாவகையிலும் படைப்பில்
ஒன்றாக இருக்கும் மனித இனம் உருவ அமைப்பில்,
மற்றும் நிறத்தில்தான் வேறுபாடு  கொண்டதாக உள்ளது.

பலவேறுபட்ட தட்ப வெட்ப நிலைகளும்,
கணக்கிலடங்கா தாவரங்களும்,உயிரினங்களும்,
 மொத்த  பரப்பில் 75 விழுக்காடுகள் நீர்பரப்பும்
அதில் கணக்கிலடங்கா வித விதமான உயிரினங்களும்.
உயிர் வாழ தேவையான பிராண வாயுவை அளிக்கும்
பசுமைக் காடுகளும் நிறைந்து விளங்கியது
முன்னொரு காலத்தில்.

இதிஹாச புராணங்களைபடித்தீர்களேயானால்
எல்லா இடங்களும் ஆரண்யம் அல்லது வனம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த உலகில் பஞ்ச பூத சக்திகள்
இந்த உலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில்
 வைத்திருந்தாலும்.
இந்த உலகின் பெரும்பாலான பகுதிகளை
அசுர சக்திகள் தங்கள் ஆதிக்கத்தில்  வைத்துக்கொண்டு
 மக்களை சிந்திக்க விடாமல் செய்து
தங்களின் அடிமைகளாகவே
காலம் பூராவும் வைத்து வந்துள்ளன
அந்த கொடுமை இன்றும் தொடர்கிறது.

அவ்வப்போது இந்த உலகிற்கு
நன்மைகளை செய்யும் தேவ சக்திகள்
இறைவனுடன் முறையிட்டு தெய்வங்களே
நேரில் பூமிக்கு வந்து அசுர சக்திகளை அழித்து
நீதியையும் தர்மத்தையும் தொடர்ந்து
நிலை நாட்டி வந்துள்ளன.

அந்த பணியை நிறைவேற்றுவதற்காக
அவைகளே மனித வடிவில் பல முறை
பிறவி எடுத்துள்ளன {உதாரணம்-ராமாவதாரம்,கிருஷ்ணாவதாரம் போன்றவை}
சில நேரங்களில் தேவ சக்திகள்
மனிதர்களின் உடலில் புகுந்து கொண்டு
அந்த வேலையை செய்திருக்கின்றன (உதாரணம்-மகாபாரதம்-பஞ்ச பாண்டவர்கள்-ராமாயணம் -புத்திர காமேஷ்டி யாக புருஷன்.  அளித்த கருப்பாயாசம்)

இந்த பிரபஞ்ச இயக்கத்தில்
நேர்மறை சக்திகளான தேவ சக்திகளும்(பொது நலம்),
எதிர்மறை சக்திகளான அசுர(சுயநலம்) சக்திகளும்
தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருக்கின்றன
இதற்க்கு முடிவே இல்லை. ஆனால் இவர்களுக்கு இடையே
நடைபெறும் போரில் பலிகடா ஆவது
இங்குள்ள லட்சக்கணக்கான் மனிதர்கள்தான்.
இந்த போர்களில் ஏவுகணைகளும், விமானங்களும், அணு மற்றும் ரசாயன ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 கோடிக்கணக்கான மனிதர்கள் கூண்டோடு கைலாசம் போயுள்ளனர்.

ஒரு தீய சக்தி அழிந்தால்
 பல தீய சக்திகள் தோன்றுகின்றன.

இந்த உலக மனிதர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களை எந்த சக்தியாலும் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இந்த அசுர சக்திகள் அவர்களை சேரவும் விடாமல் சிந்திக்கவும் விடாமல் செய்து அவர்களை என்று தங்கள் கட்டுப்பாட்டில் அடிமைகளாக வைத்துக்கொண்டிருக்கின்ற எப்படி ?
(இன்னும் வரும்)

pic. courtesy google images.

Thursday, August 22, 2013

இந்த பூமி வேற்றுலக சக்திகளின் கொத்தடிமைக் கூடம் (Part-1)

இந்த பூமி வேற்றுலக சக்திகளின் 
கொத்தடிமைக் கூடம் (Part-1)

இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு
இந்த புவியை வேற்றுலக சக்திகள்
இங்குள்ள வளங்களை சுரண்டுவதற்கும்,
இங்குள்ள மக்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு
ஆள்வதற்கும் இன்றும் தொடர்ந்து
பயன்படுத்திக்  கொண்டு வருகின்றன என்பதை
சற்று தெளிவாக சிந்திக்கக்கூடிய
அறிவு கொண்டவர்கள் உணர முடியும்.

நல்ல சக்திகளும்
தீய சக்திகளும் தங்கள் முகாம்களை
இங்கு அமைத்துக்கொண்டு அவைகளின்
வேலைகளை தங்கு தடையில்லாமல்
 செய்து கொண்டிருக்கின்றன.

இந்த பூமியில் பல லட்சக்கணக்கான
ஆண்டுகளாக இந்த வேலை நடந்துகொண்டிருக்கிறது
.
 நல்ல சக்திகள்
இறைவனின் துணையைக் கொண்டும்
தீய சக்திகள் கோர தவங்களை செய்து
பல வரங்களைப் பெற்று அடைந்த  சக்திமூலம்
அனைவரையும் அடிமைப்படுத்தி
ஆட்டிவைத்து தங்கள் சுய லாபங்களை
 நிறைவேற்றிக் கொள்கின்றன.

தீய சக்திகளின் கொடுமைகள்
எல்லை மீறும்போது தெய்வங்கள்
இங்கு வந்து அவைகளை அடக்கி அழிக்கின்றன
அல்லது அடக்கி வைக்கின்றன.

இங்கு வந்துவிட்ட தெய்வ சக்திகள்
 இங்கேயே தங்கி அவர்களை நம்புபவர்களை
அவ்வப்போது தீய சக்திகளிடமிருந்து
காப்பற்றிவருகின்றன.

அந்த சக்திகள்தான் வானுலகத்திலிருந்து
அவதாரம் செய்து இங்கு வந்து நல்லவர்களை
 காப்பாற்றிய கதைகள்தான் இதிஹாச புராணங்கள்.

தீய சக்திகளோடு போரிட்டு
அவைகளை அழித்ததுதான் மகாபாரதம்
சூரா சம்ஹாரம்
உலக மாஹா யுத்தங்கள் போன்றவைகள்.

அந்த போர்களில் பயன்படுத்தப்பட்ட
ஆயுதங்கள் யுக்திகள்,தகவல் தொடர்பு சாதனங்கள்
 எல்லாம் வானுலக சக்திகளை சார்ந்தவை.

இந்த உலகில் வல்லரசுகளிடம் இருக்கும்
கொடிய ஆயுதங்களும் அவைகள் அளித்தவையே.

வெளிக்ரக சுயநல சக்திகள்
இந்த உலக சக்திகளை விட அறிவிலும்,
சக்தியிலும் பல லட்சம் மடங்கு பெரியவை.

பிரபஞ்சத்தில் உள்ள
 பல கோடி அண்டங்களில்
நம் பூமி எதிலேயும் சேர்த்துக்கொள்ள முடியாது.
அந்த அளவிற்கு கணக்கில்
கொள்ள முடியாத அளவில் மிக சிறியது .

அவைகள் நம்மை எப்படி
அடிமைப்படுத்தியுள்ள
என்பதை பார்ப்போம்.

(இன்னும் வரும்) 

Monday, August 12, 2013

இந்திய சுதந்திரம் 66

இந்திய சுதந்திரம் 66


இந்திய நாடு ஆளுமை
ஆட்சி கை மாறியது
66 ஆண்டுகளுக்கு முன்பு

வெள்ளையர்களின் கையிலிருந்து
நம் நாட்டு கொள்ளையர்களின்
கைகளுக்கு அதிகாரம் வந்து சேர்ந்தது

நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று
கனவு கண்டனர் நாட்டு மக்கள்

நம்மை ஆளுபவர்களை நாமே
தேர்ந்தெடுப்போம் அவர்கள் நமக்கு
நல்லது செய்வார்கள் என்று நம்பியே
66 ஆண்டுகள் ஓட்டிவிட்டோம்

வறுமை ஒழியும் வறுமை ஒழியும் என்று
பொறுமையாக காத்திருந்தது
ஏமாந்த மக்கள் கூட்டம்.

வறுமையும் ஒழியவில்லை
வாழ்வும் மேம்படவில்லை
எதற்கெடுத்தாலும் வரி
எதை செய்தாலும் வரி. எதுவும் செய்யாமல்
இருந்தாலும் வரி. பேசினாலும் வரி
பேசாவிட்டாலும் வரி.

கொடுப்பதுபோல் கொடுத்து மீண்டும் பலமடங்கு
மக்களிடமே பிடுங்கி தின்கிறது ஆளும் வர்க்கம்

எதற்கெடுத்தாலும் அனுமதி பெறுவதற்கே
பல ஆண்டுகள் அலைகழிப்பு.
எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்
மக்கள் மனதிலே வஞ்சம்
எங்கு பார்த்தாலும் பஞ்சம்

நாட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன
தெளிந்த நீரோடை போல் ஓடிய ஆறுகள்
அழுக்காறாய்  நாற்றமடித்து கொண்டிருக்கின்றன.

இலவசங்களை கொடுத்து வாக்கு சீட்டை
பெறுகின்றார் ஏமாந்த மக்களிடம்
ஐந்து ஆண்டுகள் நாட்டை சுரண்ட

உள்ளூர் வங்கியில் காசை வைத்தால்
காரணம் கேட்கின்றான், கணக்கு கேட்கின்றான் என்று
அந்நிய நாட்டு வங்கிகளில் போட்டு வைக்கிறார்
பத்திரமாக கொள்ளைஅடித்த  பணத்தை

கோடிக்கணக்கான மக்களுக்கு வீடில்லை,
வாசல் இல்லை கல்வி இல்லை, மருத்துவ வசதி இல்லை
உழைக்க தொழில் இல்லை ,உழைத்தாலும்
குறைந்த பட்ச ஊதியமுமில்லை ,
ஏன் எதிர்காலமே இல்லை இந்நாட்டில்

அக்கிரமத்தை எதிர்த்தால் அடியும் உதையும்
அடங்கி போனாலும் வலியும்  வேதனையும்
ஊழலை எதிர்ப்போர் காணாமல் போவார்
அவர்களின் குடும்பம் வீணாகி போகும்.

நாட்டில் யாருக்கும் யாராலும் பாதுகாப்பில்லை
ஆனால் ஆளுபவர்களுக்கு மட்டும் ஆயுதமேந்திய
வீரர்களில் பாதுகாப்பு உண்டு

நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பில்லை
நம்மை காப்பாற்ற நின்றுகொண்டிருக்கும்
சிப்பாய்களுக்கும் கூட.

எங்கு வேண்டுமானாலும் எச்சில்,துப்ப, மலஜலம் கழிக்க,குப்பை போட பொது சொத்துக்களை எந்த காரணமுமின்றி நாசம் செய்ய ,கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றிவிட்டு ஓடிவிட, லஞ்சம் வாங்க , பொது சொத்துக்களை ஆக்கிரமிக்க,இயற்க்கை வளங்களை சுரண்ட சுதந்திரம் உண்டு.

நேர்மையாக வாழ சுதந்திரம்  கிடையாது இந்நாட்டில்.
கேடிகளாய்   வாழலாம்
கோடிகளை  அள்ளலாம்   இந்த நாட்டில்.

சுதந்திர தினம் கொண்டாடுவோம். மூவர்ண கொடி
கையில் ஏந்தி -பொது இடங்களில் கொடி  ஏத்தி
ஆடுவோமே பள்ளு  பாடுவோமே என்று  பாடிவிட்டு
அரசு மது கடைகளில் கள்ளும்  சாராயமும்
குடிப்போர் குடித்து எல்லாவற்றையும் மறந்து மகிழட்டும்

மற்றவர்கள் தொலை காட்சி பெட்டிக்குள் முகத்தை
புதைத்துக் கொள்ளட்டும்.

இவ்வளவு இருந்தும் வாழ்க சுதந்திரம்
ஏனென்றால் சர்வாதிகாரம் மிக கொடியது. 

Saturday, May 25, 2013

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

எத்தனை காலம்தான்

ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?எத்தனை காலம்தான் 
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

இந்தியா முன்னேறிவிட்டதா?
முன்னேறியிருக்கலாம்
ஆனால் எந்த வகையில் 
என்பதுதான் என்று கேள்வி?

ஊதாரித்தனமாக செலவு செய்யும் 
அரசு இயந்திரங்களும்,அரசு அதிகாரிகளும்


பொது பணத்தை கொள்ளையடிக்கும்  அரசியல்வாதிகள் 

போராட்டம்,மறியல் என்ற பெயரில்
பொது சொத்துக்களை பாழடித்து ,மக்களை 
கொடுமைபடுத்தும் அரசியல் கட்சிகள். 
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு 
மல ஜலம் கழிக்க பாதுகாப்பான மறைவிடம் இல்லை .
அதை முழுவதுமாக நிறைவேற்றித்தர 
அரசும் தயாராக இல்லை 
மக்களுக்கும் இந்த முக்கியமான 
சுகாதார பிரச்சினையை பற்றி 
சிந்திக்கும் அறிவும் இல்லை  

அரசு கட்டிகொடுத்த கழிப்ப்பிடங்கலோ
சரியாக பராமரிக்கப்டாமல் 
சுகாதார கேடு விளைவிக்கும்
இடங்களாக மாற்றி வைத்திருக்கும் மக்களின் 
பொறுப்பற்ற செயல் என்பதும் கண்கூடு 

ராக்கட்டுகளை வானில் விட்டுக்கொண்டு 
வாண வேடிக்கை காட்டிகொண்டிருக்கும் 
அரசுகளே ஏழை மக்களின் பாக்கெட்டை
நிரப்ப வழி வகை கண்டீர்கலேன்றால் நல்லது 

இல்லையேல் மக்களை ஏமாற்றி பிழைக்கும்
அரசியல்வாதிகள் 
உழைத்து உழைத்து
ஓய்ந்து   போயிருக்கும் மக்கள் 
உங்களை துவைத்து எடுக்கும் நாள்
வெகு தூரத்தில் இல்லை 

Thursday, February 28, 2013

குழந்தை என்ன பாவம் செய்தது.?குழந்தை 
என்ன பாவம் செய்தது.?


இந்திய நாடு வெள்ளையர்களின்
ஆதிக்கத்திலிருந்து 1947ல் சுதந்திரம்
அடைந்ததாக் நம்பிகொண்டிருக்கிறோம்

ஆனால் 65 ஆண்டுகள் கழிந்த பின்னும்
அரசின் கருப்பு சட்டங்களினால்
கொடுமைக்கு உள்ளாகும்
பழங்குடியினரை காக்க எந்த
அரசுகளும் தயாராக இல்லை
என்பதுதான் கசப்பான
வேதனை தரும் உண்மை.

நாம் விண்ணில்
ஏவுகணைகளை விட்டு
உலக நாடுகளை
அசத்தியிருக்கலாம்

இன்னும் பல விஷயங்களில்.
கற்காலத்திர்க்கும்  முந்தய காலாமான
காட்டாட்சி தர்பாரைதான்
இன்றும் கண்டுகொண்டு இருக்கிறோம்

கீழே உள்ள இந்த படத்தை காணுங்கள்Hut of Primitive Tribes crushed by administration, hundreds homeless. Photo : Special Arrangement

இதில் உள்ள குழந்தை
என்ன பாவம் செய்தது.?
பாரத மண்ணில் பிறந்ததா?
அல்லது சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்ததா?
அதுவும் காட்டு பகுதியில் வசிக்கும்
ஆதிவாசியின் பெற்றோர்களுக்கு பிறந்ததா?

சட்டீஸ்கர் அரசு
ஆதிவாசிகள்  வன விலங்குகளுக்கு
இடையூறாக இருப்பதாக கருதி
30 குடிசைகளை
இடித்து தள்ளிவிட்டது.
வன பாதுகாப்பு சட்டம் கூறும்
விதிகளை காட்டி.
(செய்தி ஹிந்து நாளிதழ்-28.2.2013 )

இந்த அநியாயத்தை கேட்க ஆளில்லை
இதுபோன்று மனிதாபிமானமற்ற அத்துமீறல்கள்
ஆதிவாசிகள் மீது இன்று நம்
நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன.

கேட்பார் யாருமில்லை.
கேட்பவர்கள். அடித்து
நொறுக்கப்படுகிறார்கள்

உண்மையில் காட்டு விலங்குகளை
வேட்டையாடி அழிக்கும் கூட்டம்
நாட்டில்தான் தைரியமாக உலவுகின்றன
பல நிலைகளில் செல்வாக்கோடு

நாட்டின் பூர்வீக குடிகளான
காடுகளில் இயற்கையோடு இயற்கையாய்
வாழும் குழந்தைகளான
உண்மையானஆதிவாசிகளின் வாழ்வு
மேம்பட்டால்தான்
நம்   நாடு சுதந்திரம் கிடைத்ததாக
கொள்ளமுடியும்.  

Saturday, January 26, 2013

குடியரசு தினம் என்றால் என்ன?Republic Day greetings 2013

2012 ஆம் இட்ட பதிவு

2013 ஆம் ஆண்டு நிலைமை அதேதான்

மேலும் பல்லாயிரம் கோடி ருபாய் ஊழல்கள் வெளி வந்ததுதான் இந்திய மக்கள் கண்ட பலன். 

விலைவாசி வானை முட்ட உயர்ந்ததுதான் 

மின்வெட்டு தினசரி கதையாகிவிட்டது. 

வாழ்க குடியரசு ஜனநாயகம்

ஏனென்றால் சர்வாதிகாரம் என்றால் பேச்சுரிமை எழுத்துரிமை பூஜ்யமாகிவிடும். WEDNESDAY, JANUARY 25, 2012

குடியரசு தினம் என்றால் என்ன

குடியரசு தினம் என்றால் என்ன?

மக்கள் சாராயம் குடித்து நாசமாக போவதற்கு அரசே கடைகளை திறந்து 
அவர்களை நிரந்தர குடிகாரர்களாக்கி எப்போதும் மயக்க நிலையிலேயே வைக்க வாய்ப்பளித்த மக்களின் முட்டாள்தனத்தை கொண்டாடும் தினம்தான் குடியரசு தினம்.

அன்று என்ன செய்வார்கள்?

நாடு முழுவதும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் என்று மக்களை பயமுறுத்தி 
சோதனை செய்வது ஒரு சடங்காக ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் 
ஆனால் அப்படியும்  தீவிரவாதிகள் அவர்கள்அனைவரின் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு எப்படியாவது தங்கள் வெறி செயலை  அரங்கேற்றுவார்கள்.அரசு வழக்கம்போல யார் மீதாவது குற்றம் சுமத்திவிட்டு,உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கி
அனுதாப அறிக்கைகளை வெளியிட்டு சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.  

குடியரசு தினத்தால் என்ன நன்மை?

தொலைகாட்சிகளில்மூன்று அல்லதுநான்கு திரைப்படங்கள், பட்டிமன்றங்கள், நடிகர் நடிகை பேட்டிகள்,தேசிய கொடி ஏற்றுதல் போன்ற காட்சிகளை கண்டு மகிழலாம்
தொலைகாட்சி நிறுவனங்கள்  அன்று மட்டும் பல கோடி ரூபாய் கல்லா கட்டும்.  

அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் விடுமுறை கிடைக்கும் 

அரசியல் கட்சியினர் மனதின் உள்ளே ஊழலை நிரப்பிக்கொண்டு வெளியே வெள்ளை வேட்டி சட்டை அணிந்து தேச பக்தியுடன் தோற்றம் அளித்து தேசிய கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்குவார்கள் மற்றும் தொலைகாட்சி முன்பு முண்டியடித்து கொண்டு போஸ் தந்து அவர்கள சடங்கை முடித்து கொள்ளுவார்கள்.இன்று மட்டும் சுதந்திர போராட்டத்தில் தங்கள் வாழ்வை தொலைத்த தியாகிகளுக்கு மாலை மரியாதை கிடைக்கும்  
குடியரசு தினத்தால் குடி மக்களுக்கு  என்ன நன்மை?

இந்திய மக்களில் பெரும்பாலான மக்களுக்கு உண்ண உணவு கிடையாது, உடுக்க நல்ல துணி கிடையாது,இரவில் தங்க பாதுகாப்பான வீடு கிடையாது நல்ல தரமான கல்வி கிடையாது, சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு கிடையாது,நல்லமருத்துவ வசதி கிடையாது. குடும்ப அட்டை கிடையாது,வாக்காளர் அட்டை கிடையாது. பிறப்பிலிருந்து மண்ணுக்குள் போகும்வரை லஞ்சதிலிருந்து விடுதலை கிடையாது பெண்களுக்கும் ,குழந்தைகளுக்கும் வீட்டிலேயும் வெளியிலேயும் பாதுகாப்பு கிடையாது 
 இதுதான் குடியரசு தினம் என்று நம்மை நாமே ஆளும் லட்சணம். 

Monday, January 21, 2013

மோசடியில் சிறந்த தமிழ்நாடு இன்று


    கல்வியில் சிறந்த தமிழ்நாடு -மஹாகவி பாரதி பாடி வைத்தான் அன்று 
    மோசடியில் சிறந்த தமிழ்நாடு இன்று 

இன்றையாய தினமலர் செய்திகள் 


    தினம் தினம் அரங்கேரும் புதிய நூதனமான மோசடிகள் 
    பேராசையால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் ஏமாறும் தமிழ் மக்கள் 
    பட்டும் திருந்தாத ஜென்மங்கள்.