Monday, February 27, 2012

கல்வி முறையில் மாற்றம் தேவை


கல்வி முறையில் மாற்றம் தேவை

கல்வி முறையில் மாற்றம் தேவை

பள்ளியில் படிக்கும் மாணவன் 
ஒருவன் தன் ஆசிரியரை 
கொடூரமாக கொலை செய்கின்றான்

கண்டிக்கும் ஆசிரியரை 
மாணவன் தண்டிக்கின்றான்

இந்த நாடு எங்கே செல்கிறது?

ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் 
பல சிறைச்சாலைகள் மூடுவிழா 
என்று மார்தட்டுகின்றனர் கல்வியாளர்கள்
ஆனால் இன்று குற்றவாளிகள் 
பள்ளிகளில் அல்லவோ
உருவாகிறார்கள்
இதற்க்கு யார் பொறுப்பு ?

கல்வியை வியாபாரமாக்கிய 
கல்வியறிவற்ற  பண முதலைகளா?

பள்ளிக்கு அனுப்பியவுடன் தங்கள் கடமை
முடிந்துவிட்டதாக எண்ணும் பெற்றோர்களா?

பாசத்திற்கும் கண்டிப்புக்கும்
வேற்றுமை காண இயலாத 
தாய் தந்தையர்களா?

ஒழுக்கத்தை போதிக்கும்
போதிமரங்கலாகிய
சில ஆசிரியர்கள் ஒழுக்க கேடாக
நடந்துகொள்வதின் விளைவா?

கல்வியின் நோக்கம் அறிவுள்ள
ஒழுக்கமுள்ள,சமுதாயத்தை
 உருவாக்குவதுதான்

ஆனால் நடப்பது பொறாமையும் போட்டியும் 
கொண்ட இயந்திரங்களைத்தான் இன்றைய 
கல்விக்கூடம் உருவாக்கிறது
பொதி மாடு போல்  மூட்டை சுமக்கும்
குழந்தைகள் இன்றைய காலத்தில்
நாம் அனுதினமும் காணும் அவலங்கள் 

ஆடுமாடுகள்போல் கொட்டடியில் அடைத்து 
வண்டிகளில் ஏற்றி சென்று நேரப்படி
 உள்ளே அனுமதித்து நேரப்படி உணவிட்டு 
மீண்டும் நேரப்படி வெளியே விடுவதர்க்கு
பெயர்தான் கல்விசாலைகளோ?

அன்போடு குழந்தைகளை அரவணைத்து 
அறிவு புகட்டும் ஆசான்கள் ஆசிரியர்கள் 
என்ற நிலை மாறி கடுமையாக கண்டிப்பு காட்டி
குழந்தைகள் மனதில் கசப்பை வளர்க்கும் 
கசாப்பு கடைகளா இன்றைய கல்விசாலைகள்? 

கிரகிக்கும் தன்மை குழந்தைக்கு குழந்தை வேறுபடும்
என்பதை அறியாத ஆசிரியர்கள் அவர்களை 
அவர்களை வழிநடத்துவது எப்படி சாத்தியம்?

வெவ்வேறு மனமும் திறனும் கொண்ட குழந்தைகள் 
அனைவருக்கு ஒரே கல்விமுறை பயிற்றுவிப்பது 
எங்கனம் சாத்தியமாகும்?

உலக வாழ்வில் வாழ தேவையான பொது அறிவு 
புகட்டும் அடிப்படையான நடைமுறை கல்வியோடு
அவரவர் விருப்பமான துறைகளில் 
கல்வியளிக்கும் முறை வர வேண்டும்

வெறும் பணம் சம்பாதிக்கும்  
இயந்திரங்களை உருவாக்கும்
காட்டாட்சி தர்பார் கல்வி முறை 
ஒழிக்கப்படவேண்டும்

ஒரே கல்வியை அனைவர் மீதும் திணிக்கும்
சர்வாதிகார முறை உடன் நிறுத்தப்படவேண்டும்

குழந்தைகளின் மனதில் நம்பிக்கை, விடாமுயற்சி
நேர்மை,தோல்விகளை எதிர்கொள்ளும் தன்மை
ஒழுக்கம் சுயமாக சிந்தித்து செயல்படும் பக்குவம் ஆகியவற்றை அடிப்படை குணங்களாக விதைக்கும் வகையில் கல்வி முறை  அமையவேண்டும்  

மாணவர்களின் மனதில் நேர்மறையான எண்ணங்களை 
விதைக்கும் கல்வி முறை உருவாக்கப்படவேண்டும். தீங்கு
பயக்கும் எதிர்மறையான எண்ணங்கள் அகற்றப்படவேண்டும் 

ஒழுக்கமில்லாத சமுதாயம் 
ப்ரேக் இல்லாத வண்டிபோல் 
கண்டபடி ஓடி அனைவரையும் 
கொன்றுவிடும் 

அரசுகள் இனிமேலாவது 
விழித்துகொண்டால் நல்லது
இல்லையேல் காண்பதற்கு 
விழியிருக்காது  

Saturday, February 18, 2012

தொலை காட்சிகளால் என்ன பயன்?


தொலை காட்சிகளால் என்ன பயன்?

தொலை காட்சிகளால் என்ன பயன்?

1.உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும்
வன்முறை சம்பவங்கள் உடனுக்குடன்
உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு
உலகம் முழுவதும் வன்முறை கலாசாரம்
பெருக வழி செய்கிறது.

2.ஒரே செய்தியை ஒவ்வொரு தொலைகாட்சியும்
அவைகள் இஷ்டம்போல் திரித்து பொய்யான
 தகவல்களுடன் வெளியிட்டு மக்களை குழப்புகின்றன

3.சிறிய பிரச்சினைகளை கூட பெரிதுபடுத்தி
மக்களிடையே அமைதியை கெடுக்கின்றன

4.ஆபாச நடனங்கள்,நாடகங்கள்,பாடல்கள்,
போன்றவற்றை அடிக்கடி ஒளிபரப்பி
இளைஞர்களின் உள்ளங்களை கெடுக்கின்றன
.
5.பொய்யான மெயப்பிக்கப்படாத
மருத்துவ முறைகளை போலி மருத்துவர்களைகொண்டு
பணம் பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றி
மோசடி செய்கின்றன

6.ஆன்மீகத்திர்க்கே தொடர்பில்லாத
போலி சாமியார்களை மக்களிடையே
விளம்பரபடுத்தி அவர்கள் மக்களிடம்
பணம் பறித்து கொழுக்க
வழிவகை செய்து தருகின்றன
.
தொலைக்காட்சிகளினால் நன்மைகள்
பல விளைந்திடினும் அதை விட
அதிக அளவில் தீமைகள்தான்
மேலோங்கிஇருகின்றன என்றால் மிகையாகாது

Wednesday, February 15, 2012

மனிதனே உன் உயிரின் விலை என்ன?

மனிதனே உன் உயிரின் விலை என்ன? 

விபத்தில் மாண்டால் 
சாலை விபத்தில் மாண்டால் சில ஆயிரம்
ரயில் விபத்தில்  மாண்டால் சில லட்சம்
விமான விபத்தில் மாண்டால் பல லட்சம்

யாருக்கும் தெரியாமல் மாண்டால் ஒன்றும் இல்லை
வீட்டிலே மாண்டால் காப்பீடு செய்திருந்தால் ஏதாவது கிடைக்கும்

உயிரின் விலை இறக்கும் இடத்தை பொருத்து நிர்ணயிக்கபடுகிறது

சில நேரங்களில் தற்கொலைகளும் தியாகமாக கருதப்பட்டு
அந்த உயிருக்கு பல லட்சங்கள் நிர்ணயிக்கபடுகின்றன

சில நேரங்களில் ஊடகங்களும் நீதிமன்றங்களும் விலையை ஏற்றிவிடுகின்றன

நாட்டிற்காக உயிர் துறந்தால் தியாகம்
நாட்டிற்காக கொலை செய்தால் அது வீரம் 

அந்த கொலையை அரசு இயந்திரம் செய்தால் அது சட்டம்
ஒழுங்கு நிலை நாட்டுதல்

அதுவே தனி மனிதன் செய்தால் அது கொலை அவனுக்கு பரிசு தூக்கு தண்டனை

அதுவே தீவிரவாதிகள் செய்தால் அவர்கள் அரசாங்க விருந்தாளிகள் சாகும்வரை 

உயிருக்கு விலை நிர்ணயிக்கமுடியாது 
உயிரை கொடுப்பவன் இறைவன் 
அதேபோல் உயிரை எடுப்பவனும் அவனே

மனிதர்கள் அவர்கள் போக்கிற்கு இந்த உண்மையை உணராமல்
பிதற்றி திரிகின்றனர் என்பதுதான் வேதனை 
  

குழந்தையை முறையாக வளர்க்க தயாராக இல்லாத ஆணும் பெண்ணும் எதற்காக குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்?

குழந்தையும் தெய்வமும் 
கொண்டாடும் இடத்திலே 
என்று ஒரு பழமொழி உண்டு.

ஆனால் அது இன்று 
ஏட்டளவில்தான் இருக்கிறது
 
காமத்தின் மிகுதியால் ஆசைவயபட்டு 
தகாத உறவு கொண்டு ஆணும் பெண்ணும் 
கருத்தரித்து சமூகத்திற்கு பயந்து கருவை கலைப்பதும்
குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் வீசி எறிவதும் 
இன்று அன்றாட  செய்திகளாகிவிட்டன 

போலியாக அன்னையர் தினம் கொண்டாடுவதும் 
மழலையர் தினம் கொண்டாடுவதும் 
இன்று உலகெங்கும் வணிக நோக்கத்திர்க்கன்றி 
வேறெதற்கு என்று புரியவில்லை?

நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் 
வாழ்வில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக
கொண்டு தாய்ப்பால் குடிக்கும் நிலையிலேயே 
குழந்தை காப்பகங்களிலே குழந்தைகளை விடுவதும் 
மழலையர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு
சென்றுவிடுவதும் இன்றைய மேற்கத்திய 
கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள்
 
அடித்தட்டு மக்கள் பிழைக்க வழியில்லாமல் 
தங்கள் குழந்தைகளையும் படிக்க அனுப்பாமல் 
வேலைக்கு அனுப்பி குழந்தைகளின் வாழ்க்கையையும் 
எதிர்காலத்தையும்  நாசமாக்குகின்றனர்

குழந்தை தொழிலாளர்கள் சட்டம், 
கட்டாய கல்வி உரிமை சட்டம் 
போன்றவை ஏட்டளவில்தான் உள்ளன

குழந்தையை முறையாக வளர்க்க தயாராக
இல்லாத ஆணும் பெண்ணும் எதற்காக 
குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்?
 
அவர்களுக்கு அவர்களை இளமைதான் முக்கியம்
அல்லது வசதியான வாழ்க்கைதான்  முக்கியம்  என்றால்
கருத்தடை  செய்து கொள்ள வேண்டியதுதானே?

சமூக விரோதிகள் குழந்தைகளை கடத்தி 
அவர்களை சித்திரவதை செய்து அவர்களின் வாழ்க்கையை சிதைத்து
சிறு வயதிலேயே அவர்களை சமூக விரோதிகளாகவும்,
பிச்சைகாரர்களாகவும் மாற்றும் அளவிற்கு
இன்றைய சமுதாயம் குழந்தைகள் மீது 
அக்கறையில்லாமல் போய்விட்டது மிகவும் வருத்தர்க்குரியது 

பூ போன்ற குழந்தைகளின் மனதிலே இன்று ஏக்கமும்
வெறியும் புகுந்து கொண்டு அவர்களை ஆட்டி படைத்து 
கொண்டிருப்பதின் விளைவுதான் ஒரு சிறுவன் ஆசிரியரை 
கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்று விட்டது

இந்த நிலைக்கு அவன் எப்படி பொறுப்பு வகிக்கமுடியும்?
இன்று எதை எடுத்தாலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்
தங்கள் எண்ணங்களைதான் அவர்கள் மீது 
திணிக்கிறார்களே தவிர அந்த குழந்தைகளின் எண்ணத்தை 
யாரும் சட்டை செய்வதில்லை 
.
குழந்தைகளுக்கு  தொலைகாட்சி ஊடகங்கள் மற்றும் திரைப்படங்கள் 
நல்ல செய்திகளையும் ஒழுக்க நெறிகளை  கொண்டு செல்லாமல் 
கொலைவெறியும், ஒழுக்க கேடும் ,சககிக்கமுடியாத அளவிற்கு  வன்முறை
காட்சிகள் மற்றும் காமத்தை தூண்டும்,போதை, களவு போன்ற 
தீய செய்திகளை அவர்களின் கருவிலிருக்கும் பருவத்திலிருந்தே 
அளித்து வருவதால் நாளைய சமுதாயம் நாசமாகி போய் கொண்டிருப்பதை 
யாரும் உணரவில்லை

இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தின் வாரிசுகள் என்பதை மக்களும், அரசும்
உணரவில்லை 
சமூகத்தில் ஒழுக்கம் அழிந்தால் யாரும் மகிழ்ச்சியாக வாழமுடியாது 
இப்போதே விழித்து கொண்டால் நல்லது 

Saturday, February 11, 2012

மொழி மனிதர்க்கு விழி

மொழி மனிதர்க்கு விழி 
அதைக்கொண்டு பரந்த உலகை ரசித்திடுக 
அதை விடுத்து மொழிகளை குறை கூறுவோர்
இழி பிறவிகளே என உணர் 

கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும் என்றால் 
பாரதியின் மீசை மட்டும் ஏன் கவிகள் பாடக்கூடாது?

மூன்றடியால் உலகை அளந்த கண்ணனின் கீதையும் 
ஈரடியால் தமிழை அளந்த வள்ளுவனின் குரலான 
குறளும் ஒன்றென்று உணர் 

வள்ளுவனும் வாசுகியும் ஈன்றெடுத்த 
தமிழ் குழவியே குறள் 

மனித பிறவிஎடுத்த ஆண்டாள் மாயவனுடன் கலந்தாள்
மனித பிறவிஎடுத்த மீராவும் கண்ணனுடன் ஒன்றி விட்டாள் 
இறைவனிடமிருந்து வந்த ஆன்மாக்கள் அவனுடன் 
மீண்டும் கலப்பதில் வியப்பேது?

கண்ணிருந்தும் குருடர்கள் உண்டு இவ்வுலகில்
காதிருந்தும் செவிடர்கள் உண்டு இவ்வவனியில் 
வாயிருந்தும்  ஊமைகளை  காணலாம் நம் வாழ்வில்
மனமிருந்தும் சிந்திக்காத மனிதர்களும் உண்டு 
என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவாரோ ?

உலகில் உள்ளதனைத்தும் 
நாம் அனைவரும்
துய்த்து மகிழவே
அதை தடுத்து அனைத்தும் 
தனக்கு மட்டும்தான் என
உரிமை கோரும்
குள்ளநரிக்கூட்டம் 
யாராக இருந்தாலும் அவர்கள் 
மனித குலத்தின் எதிரிகளே 

சுயநலம் மிகுந்த  மனிதன் தானே 
மற்றொரு மனிதனை அழித்த 
காலம் போய் எந்திரங்கள் கொண்டு 
மற்றவரை அழிக்க நினைத்ததால்தான்
அது போன்ற இழி பிறவிகளை அழிக்க 
புயலாக வந்ததுதான் தானே 

வானில் சிறகடித்து பறக்கும்
பறவைகளை அழிக்கும் மனித 
வேட்டையர்களின் கொட்டத்தை
அடக்க இறைவன் அனுப்பிய 
படையே பறவைக்காய்ச்சல்

தான் மிகுந்த அறிவுள்ளவன் என்று பிதற்றும் 
சில மனிதர்கள்தான்  மனித குலத்தை அழிக்கும் 
அரக்கர்களாக உலகில் வலம் வருகின்றனர் 

அன்பே வடிவாகிய சிவனுக்கு மனிதன் வழங்கிய
வடிவம் நச்சுபாம்பும் திரிசூலமும் 

அனைவரையும் காக்கும் திருமாலுக்கு அவன் வழங்கிய
வடிவம் நஞ்சை கக்கும்  பாம்பு படுக்கையும்,அம்பும் வில்லும்

மனிதனின் மனம் சிந்திப்பது ஒன்றும் 
செய்வது ஒன்றாக இருக்கும் வரையிலும்
இவ்வுலகில் அமைதி புறா பறக்க வழியில்லை