Thursday, August 22, 2013

இந்த பூமி வேற்றுலக சக்திகளின் கொத்தடிமைக் கூடம் (Part-1)

இந்த பூமி வேற்றுலக சக்திகளின் 
கொத்தடிமைக் கூடம் (Part-1)





இந்த உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு
இந்த புவியை வேற்றுலக சக்திகள்
இங்குள்ள வளங்களை சுரண்டுவதற்கும்,
இங்குள்ள மக்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு
ஆள்வதற்கும் இன்றும் தொடர்ந்து
பயன்படுத்திக்  கொண்டு வருகின்றன என்பதை
சற்று தெளிவாக சிந்திக்கக்கூடிய
அறிவு கொண்டவர்கள் உணர முடியும்.

நல்ல சக்திகளும்
தீய சக்திகளும் தங்கள் முகாம்களை
இங்கு அமைத்துக்கொண்டு அவைகளின்
வேலைகளை தங்கு தடையில்லாமல்
 செய்து கொண்டிருக்கின்றன.

இந்த பூமியில் பல லட்சக்கணக்கான
ஆண்டுகளாக இந்த வேலை நடந்துகொண்டிருக்கிறது
.
 நல்ல சக்திகள்
இறைவனின் துணையைக் கொண்டும்
தீய சக்திகள் கோர தவங்களை செய்து
பல வரங்களைப் பெற்று அடைந்த  சக்திமூலம்
அனைவரையும் அடிமைப்படுத்தி
ஆட்டிவைத்து தங்கள் சுய லாபங்களை
 நிறைவேற்றிக் கொள்கின்றன.

தீய சக்திகளின் கொடுமைகள்
எல்லை மீறும்போது தெய்வங்கள்
இங்கு வந்து அவைகளை அடக்கி அழிக்கின்றன
அல்லது அடக்கி வைக்கின்றன.

இங்கு வந்துவிட்ட தெய்வ சக்திகள்
 இங்கேயே தங்கி அவர்களை நம்புபவர்களை
அவ்வப்போது தீய சக்திகளிடமிருந்து
காப்பற்றிவருகின்றன.

அந்த சக்திகள்தான் வானுலகத்திலிருந்து
அவதாரம் செய்து இங்கு வந்து நல்லவர்களை
 காப்பாற்றிய கதைகள்தான் இதிஹாச புராணங்கள்.

தீய சக்திகளோடு போரிட்டு
அவைகளை அழித்ததுதான் மகாபாரதம்
சூரா சம்ஹாரம்
உலக மாஹா யுத்தங்கள் போன்றவைகள்.

அந்த போர்களில் பயன்படுத்தப்பட்ட
ஆயுதங்கள் யுக்திகள்,தகவல் தொடர்பு சாதனங்கள்
 எல்லாம் வானுலக சக்திகளை சார்ந்தவை.

இந்த உலகில் வல்லரசுகளிடம் இருக்கும்
கொடிய ஆயுதங்களும் அவைகள் அளித்தவையே.

வெளிக்ரக சுயநல சக்திகள்
இந்த உலக சக்திகளை விட அறிவிலும்,
சக்தியிலும் பல லட்சம் மடங்கு பெரியவை.

பிரபஞ்சத்தில் உள்ள
 பல கோடி அண்டங்களில்
நம் பூமி எதிலேயும் சேர்த்துக்கொள்ள முடியாது.
அந்த அளவிற்கு கணக்கில்
கொள்ள முடியாத அளவில் மிக சிறியது .

அவைகள் நம்மை எப்படி
அடிமைப்படுத்தியுள்ள
என்பதை பார்ப்போம்.

(இன்னும் வரும்) 

Monday, August 12, 2013

இந்திய சுதந்திரம் 66

இந்திய சுதந்திரம் 66






இந்திய நாடு ஆளுமை
ஆட்சி கை மாறியது
66 ஆண்டுகளுக்கு முன்பு

வெள்ளையர்களின் கையிலிருந்து
நம் நாட்டு கொள்ளையர்களின்
கைகளுக்கு அதிகாரம் வந்து சேர்ந்தது

நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று
கனவு கண்டனர் நாட்டு மக்கள்

நம்மை ஆளுபவர்களை நாமே
தேர்ந்தெடுப்போம் அவர்கள் நமக்கு
நல்லது செய்வார்கள் என்று நம்பியே
66 ஆண்டுகள் ஓட்டிவிட்டோம்

வறுமை ஒழியும் வறுமை ஒழியும் என்று
பொறுமையாக காத்திருந்தது
ஏமாந்த மக்கள் கூட்டம்.

வறுமையும் ஒழியவில்லை
வாழ்வும் மேம்படவில்லை
எதற்கெடுத்தாலும் வரி
எதை செய்தாலும் வரி. எதுவும் செய்யாமல்
இருந்தாலும் வரி. பேசினாலும் வரி
பேசாவிட்டாலும் வரி.

கொடுப்பதுபோல் கொடுத்து மீண்டும் பலமடங்கு
மக்களிடமே பிடுங்கி தின்கிறது ஆளும் வர்க்கம்

எதற்கெடுத்தாலும் அனுமதி பெறுவதற்கே
பல ஆண்டுகள் அலைகழிப்பு.
எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்
மக்கள் மனதிலே வஞ்சம்
எங்கு பார்த்தாலும் பஞ்சம்

நாட்டு வளங்கள் சுரண்டப்படுகின்றன
தெளிந்த நீரோடை போல் ஓடிய ஆறுகள்
அழுக்காறாய்  நாற்றமடித்து கொண்டிருக்கின்றன.

இலவசங்களை கொடுத்து வாக்கு சீட்டை
பெறுகின்றார் ஏமாந்த மக்களிடம்
ஐந்து ஆண்டுகள் நாட்டை சுரண்ட

உள்ளூர் வங்கியில் காசை வைத்தால்
காரணம் கேட்கின்றான், கணக்கு கேட்கின்றான் என்று
அந்நிய நாட்டு வங்கிகளில் போட்டு வைக்கிறார்
பத்திரமாக கொள்ளைஅடித்த  பணத்தை

கோடிக்கணக்கான மக்களுக்கு வீடில்லை,
வாசல் இல்லை கல்வி இல்லை, மருத்துவ வசதி இல்லை
உழைக்க தொழில் இல்லை ,உழைத்தாலும்
குறைந்த பட்ச ஊதியமுமில்லை ,
ஏன் எதிர்காலமே இல்லை இந்நாட்டில்

அக்கிரமத்தை எதிர்த்தால் அடியும் உதையும்
அடங்கி போனாலும் வலியும்  வேதனையும்
ஊழலை எதிர்ப்போர் காணாமல் போவார்
அவர்களின் குடும்பம் வீணாகி போகும்.

நாட்டில் யாருக்கும் யாராலும் பாதுகாப்பில்லை
ஆனால் ஆளுபவர்களுக்கு மட்டும் ஆயுதமேந்திய
வீரர்களில் பாதுகாப்பு உண்டு

நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பில்லை
நம்மை காப்பாற்ற நின்றுகொண்டிருக்கும்
சிப்பாய்களுக்கும் கூட.

எங்கு வேண்டுமானாலும் எச்சில்,துப்ப, மலஜலம் கழிக்க,குப்பை போட பொது சொத்துக்களை எந்த காரணமுமின்றி நாசம் செய்ய ,கோடிக்கணக்கில் மக்களை ஏமாற்றிவிட்டு ஓடிவிட, லஞ்சம் வாங்க , பொது சொத்துக்களை ஆக்கிரமிக்க,இயற்க்கை வளங்களை சுரண்ட சுதந்திரம் உண்டு.

நேர்மையாக வாழ சுதந்திரம்  கிடையாது இந்நாட்டில்.
கேடிகளாய்   வாழலாம்
கோடிகளை  அள்ளலாம்   இந்த நாட்டில்.

சுதந்திர தினம் கொண்டாடுவோம். மூவர்ண கொடி
கையில் ஏந்தி -பொது இடங்களில் கொடி  ஏத்தி
ஆடுவோமே பள்ளு  பாடுவோமே என்று  பாடிவிட்டு
அரசு மது கடைகளில் கள்ளும்  சாராயமும்
குடிப்போர் குடித்து எல்லாவற்றையும் மறந்து மகிழட்டும்

மற்றவர்கள் தொலை காட்சி பெட்டிக்குள் முகத்தை
புதைத்துக் கொள்ளட்டும்.

இவ்வளவு இருந்தும் வாழ்க சுதந்திரம்
ஏனென்றால் சர்வாதிகாரம் மிக கொடியது.