Monday, December 5, 2011

everybody commits mistakes but fools alone repeat them

மக்களிடம் குறி சொல்லி முப்பது லட்சம் மோசடி-பெண் கைது 
பரிகாரம் செய்வதாக பல லட்சம் மோசடி 
இப்படியாக தினம் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன
சிறிதளவு பேச்சு திறமை இருந்தால் போதும்
குறி சொல்பவர்களுக்கு நன்றாக பட்டை போட்டுகொண்டு 
பெரிய அளவில் ஒரு குங்கும போட்டு வைத்துசிகப்பு வேட்டி
கட்ட தெரிந்தால் போதும்  
ஒன்று அம்மன் படம் இவைகள்தான் மூலதனம் 
கூட ஆமாம் சாமிகள் இரண்டுபேர் இருந்தால் விசேஷம் 
எவனாவது இளிச்ச வாயனை வைத்து 
ஒரு அன்ன தானம் ஏற்பாடு செய்தால் போதும்
கூடவே ஒரு மஞ்ச துணியில் கட்டப்பட்ட உண்டி 
ஒரு வேப்பிலை மரத்தடி.அங்கே ஒரு கரையான் புற்று 
அதற்குள் ஒரு சுயம்பு என கதை கட்டிவிட்டால் போதும் 
இரண்டு பெண்களின் நெற்றியில் பெரிய குங்குமம் இட்டு 
மஞ்சள் புடவை  தலையை விரித்து சாமியாட விட்டால்போதும் 
அங்கு வரும் பெண்களும் ஆடதயாராகிவிவார்கள்  
இவ்வளவுதான் அவர்கள் மூலதனம் 
பிறகு என்ன கொட்டோ கொட்டு என்று கொட்டும் பணம் 
பிறகு கொஞ்சம் வசதியான ஏமாளிகளை தேர்ந்தெடுத்து
குறி சொல்ல ஆரம்பித்தால் போதும் 
கார் பங்களா,வீடு,நிலம் என பெரிய ஆளாகிவிடலாம்
குறி சொல்பவனுக்கு,ஒழுக்கமோ,கல்விதகுதியோ,எதுவும் தேவையில்லை 
இடத்திற்கு  ஏற்றாற்போல்,கத்தி மீது  நின்றோ ,முள்மீது நின்றோ ஆணிமீது நின்றோ,ஆட்டை கடித்தோ இல்லை கோழியை கடித்தோ,இல்லை
குங்குமம்,விபூதி வரவழைத்தோ பாக்கு, வெற்றிலை,சாராயம் குடித்தோ  என்று ஏதாவது யுக்தியை பயன்படுத்தி ஒருவருக்கும் ஒன்றும் புரியாதபடி தாறுமாறாக உடுக்கை சத்தத்துடன் உளறினால்  போதும்,

இல்லாவிடில் ஒருவருக்கும் புரியாமல் ஏதாவது முணுமுணுத்தால்  போதும் 
ஆன்மீகம் என்றால் இப்படிதான் என்று பல கோடிகணக்கான மக்கள் நினைத்துகொண்டு
எதையும் ஆராயாமல் அப்படியே போலிகளை,புரட்டுகாரகளை நம்பி தங்கள்,மனம்,மரியாதை, பணம், எல்லாவற்றையும் இழந்துகொண்டிருகின்றனர்

தகுந்த மருத்துவ சிகிச்சையினால் மட்டுமே குணமாகும் நோய்களை இவர்கள் மாயமாலத்தால் நீக்குவதாக ஏமாற்றுகின்றனர்.
தீராத நோய்களையும்,உடற்குறைகளையும் நீக்கிவிட்டதாக சிலரை நடிக்கக வைத்து மக்களை நம்ப வைக்கின்றனர்.
பலமுறை இவர்களின் சாயம் வெளுத்தாலும் மக்கள் திருந்துவதேயில்லை 
இந்த போலிகளுக்கு  ஆதரவாக அரசியல்வாதிகளும் சமூக விரோதிகளும் 
எப்போதும் பக்க பலமாக இருக்கின்றனர்
காவல் துறையும் இவர்களை கண்டு கொள்வதில்லை 
மெத்த படித்தவர்களும் இவர்களின் வலையில் மிக எளிதாக சிக்கிவிடுகின்றனர்

இறைவன் என்றால் யார், உண்மையான ஆன்மிகம் என்பதை  இவர்களுக்கு யார் புரிய வைப்பது.?
இந்த அயோக்கியதனத்தை அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் 
அவரவர்கள் வழியில் மிகவும் புத்திசாலி தனமாகவும் 
,தந்திரமாகவும் கையாள்கின்றனர்
மக்களை வ்டி கட்டின முட்டாளாக்குகின்றனர்..
இந்த மயக்கத்திலிருந்து இவர்களை யாராலும் காப்பாற்றமுடியாது 
இறைவனே நினைத்தாலும் கூட 
everybody commits mistakes
but fools alone  repeat them 

No comments:

Post a Comment