Wednesday, September 19, 2012

உலகத்தில் திருடர்கள் சரி பாதி


உலகத்தில் திருடர்கள் சரி பாதி 

உலகத்தில் திருடர்கள் சரி பாதி என்றான் ஒரு கவிஞன் 
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது என்றான் 
அதே கவிஞன் 

அளவுக்கு மேலே பொருள் வைத்திருந்தாள் 
அவனும் திருடனும் ஒன்றாகும் என்று 
வேறு ஒரு கருத்தையும்  சொல்லி வைத்தான் 

திருடர்களைப் பற்றியும்,திருட்டை பற்றியும் எழுத்தாளர்களும் 
,கவிஞர்களும் திரைப்பட தயாரிப்பாளர்களும் 
அதை நியாய படுத்தி பல படங்களை எடுத்து விட்டார்கள் 

அப்பேர்ப்பட்ட மரியாதைக்குரியது திருட்டும் களவும் 
இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போல் தோன்றுகிறது 
ஆனால் இரண்டும் வேறு வேறாகத்தான் இருக்க முடியும் 

வீட்டை பூட்டி கொண்டு கடைக்கு சென்றேன். திரும்பி வந்து பார்த்தால்வீட்டின் கதவின் பூட்டை உள்ளே சென்று
இரும்பு பீரோவின் கதவை உடைத்து அதன் உள்ளே லாக்கரை உடைத்து நகைகளை திருடி கொண்டு திருடன் திருடிக்கொண்டு
போய்விட்டான் என்று தினமும் தொலை காட்சியிலே பேட்டி வரும் 

அதை பல முறை ஒளிபரப்பி எதிர்கட்சி தொல்லை காட்சிகள் ஆளும் கட்சியின் வயித்தெரிச்சலை கொட்டி கொள்ளும். .

பொதுவாக நாம் எல்லோரும் பல லட்சம் அல்லது 
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீட்டை
 சில நூறு ருபாய் மதிப்புள்ள பாதுகாப்பில்லாத 
 பூட்டுகளிடம் நம்பி விட்டு வெளியே செல்கிறோம் 
.இரும்பு பீரோவில் வைத்தாலும் மர பீரோவில்  வைத்தாலும் 
திருடனுக்கு அதை உடைத்து பொருட்களை
 எடுத்து கொண்டு போவது கடினமல்ல.

பல நேரங்களில் மனிதர்கள் இருக்கும்போதே 
அவன் கைவரிசையை காட்டி விடுகிறான். 
எதிர்ப்பவர்களை கொன்றும் விடுகிறான்.
 பிடிபட்டாலும் சில மாதங்கள் சிறையிலிருந்து 
அரசு சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அங்குள்ள 
பல அனுபவம் வாய்ந்த திருடர்களிடம் 
புதிய திருட்டு முறைகளை கற்றுக்கொண்டு 
மீண்டும் தொழிலில் ஈடுபடுகிறான். 

திருட்டுக்கள் ஒவ்வொரு நாளும் 
அதி நவீனமான தொழில். நுட்பங்களுடன் வளர்ந்து வருகிறது.
திருட்டு நடைபெறாத துறையே இல்லை எனலாம்.
இந்த துறையில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. தாங்களாகவே தொழில் செய்யலாம் அல்லது பிறருக்காக கூலிக்கும் தொழில் செய்யலாம். 

திருடர்களின் குறிக்கோள் ஒரு பெரிய கொள்ளையாக செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவதுதான். ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்ப்பதில்லை   அந்த அளவிற்கு மக்களின் வாழ்வோடு அது கலந்துவிட்டது.

அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில்  சனி  .
அகப்படாமல் தப்பியவர்கள் எதிகாலத்தில் நாட்டை ஆளும் பொறுப்பை கூட  பெற நேரிடலாம் அல்லது பெரிய மகானாக மக்களால் வணங்க படக்கூடும் 

மக்கள் பாடுபட்டு  சேர்த்த காசுகள் தங்க நகைகளாக மாறி தங்க நகை கடை அலமாரிகளிலிருந்து வீட்டு அலமாரிகளில் தஞ்சம் புகுகிறது. 
அதை கேப்மாரிகள் வீட்டு அலமாரிகளிலிருந்து புத்திசாலிதனமாக அபகரித்து விடுகிறார்கள். 

தங்கம் அங்கத்தை அழகு செய்வதாக மக்கள் நம்புகிறார்கள்  அதுவும்  கழுத்தில் இருந்தால்  வண்டிகளில் வந்து சங்கிலியை அறுத்து சென்று விடுகிறார்கள். 

கோயிலில் நகை அணிந்து கொண்டு கண் மூடி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது திருடன் அபேஸ் செய்து விடுகிறான்.

எங்கு போனாலும் திருட்டு திருடர்கள். பஸ்சிலும் திருடர்கள். ரெயிலிலும் திருடர்கள், அவர்கள் கடவுளைப்போல் எல்லா இடாதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். மறைந்திருக்கிறார்கள் அவர்கள் இல்லாத இடமேஇல்லை  அவர்கள் 24மணி நேரமும் ஓய்வில்லாது செயல்படுகிறார்கள். 

இறைவன் திருடினால் அது லீலை; அது கொண்டாட்டம். மகிழ்ச்சி.
மனிதர்கள் திருடினால் அது குற்றம். அது துக்கம். 
இறைவனை கள்வன் என்று அன்போடு அழைக்கிறோம்.

நாம் கவனக்குறைவாக இருக்கும்போது அதை பயன்படுத்தி பொருட்களை கவ்ர்வதினால் திருடர்களுக்கு கள்வர்கள் என்று பெயர் வந்திருக்கலாம். 

நாம் செல்வத்திற்கு அதிபதியான இலக்குமிதேவியை திரு மகள் என்று அழைக்கிறோம். வேங்கட மலையை திருவேங்கடம் என்று அழைக்கிறோம். நம்மால் மதிக்கப்படும்   அனைத்திற்கும் திரு என்றஅடை மொழி நிச்சயம் உண்டு.

அதைபோல்தான் புத்திசாலிதனமாக செயல்பட்டு திடீர் செல்வந்தர்களாகும்  களவு செய்பவர்களையும் திரு அடைமொழி போட்டு திருட்டு என்றும் திருடர்கள் என்று அழைப்பதும் வழக்கத்தில் வந்துவிட்டதோ?

2 comments:

 1. வித்தியாசமான சிந்தனைகள் + கருத்துக்கள்...

  ReplyDelete
 2. திருட்டு தொழில் செய்பவர்கள்
  ஒவ்வொரு நாளும் புதிதாக சிந்திக்கிறார்கள்
  அவர்கள் தொழிலை திறம்பட செய்கிறார்கள்.
  ஆனால் திருட்டு கொடுப்பவர்கள் சிந்திப்பதே இல்லை
  அதனால்தான் திருட்டு கொடுப்பவர்களின்
  எண்ணிக்கை உலகம் முழுவதும்
  நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது

  ReplyDelete