Tuesday, October 23, 2012

தமிழக மீனவர்களும் நாட்டு மக்களும்


தமிழக மீனவர்களும் 
நாட்டு மக்களும் 

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் நாட்டு
கடற்க்கரையோர மீனவர்கள்,அதுவும் குறிப்பாக
தென் பகுதி மீனவர்கள்
பெரும் துன்பத்திற்கு
உள்ளாகி வருகின்றனர்.

அதுவும் கட்ச தீவை இலங்கைக்கு
தாரை வார்த்த பின்பும், இலங்கையில்
உள்நாட்டுகலவரங்கள்,போர் முதலிய
சம்பவங்கள் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு பிறகு
அவர்களின் துன்பங்கள் பன்மடங்கு பெருகிவிட்டது எனலாம்.

தினமும் இலங்கை கடற்ப்படையினரால்
ஏதாவதொரு தாக்குதல்
அவர்கள்மீது நடத்தப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகள் மட்டும் அவர்களுக்காக
குரல் எழுப்புவதோடு மட்டும் சரி.

மற்றும் மாநில அரசோ மைய அரசோ
அவர்கள் பிரச்சினையை தீர்த்து
முற்றுபுள்ளி வைக்க
தீவிர முயற்சி செய்ய வில்லை.

இந்த பிரச்சினையை எடுத்தோம் கவிழ்த்தோம்
என்று விட்டுவிடவும் முடியாது .
கண்டுகொள்ளாமலும் இருக்க முடியாது

ஏனென்றால் உனக்கு எதிரி எனக்கு நண்பன்
என்ற கொள்கை அடிப்படையில் இலங்கை
நம்முடைய எதிரிகளான சீனாவுடனும் ,
பாகிஸ்தானுடனும் கொஞ்சி குலாவி அவர்களை
தன் நாட்டில் சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்து
இந்தியாவுடனும் நட்பு பாராட்டி வருகிறது.

மீனவர்கள் பிரச்சினையில் ஏன்
வட மாநில மக்களோ தமிழ் நாட்டு மக்களோ
ஆர்வம் காட்டவில்லை என்று
சிலர் நினைக்கக்கூடும்

அதற்க்கு காரணம் மீனவர்கள்
 வாழ்க்கை முறை அப்படி அமைந்துவிட்டது

அவர்கள் கடலில் பிடித்து கொண்டு வந்த மீனை
பொது மக்களுக்கு விற்று காசாக்குவதொடு
மக்கள் தொடர்பு முடிவடைந்துவிடுகிறது.

ஆண்கள் விடியுமுன்பே
கடலுக்கு சென்று விடுகிறார்கள்

பெண்கள் பகலில் மீன் விற்க
சென்றுவிடுகிறார்கள்.

அதனால் அவர்கள் வாழ்வு அவர்கள் செய்யும் தொழிலுண்டு
வேலை உண்டு என்று முடங்கிவிடுவதால்
பொதுமக்களோடு தொடர்பில்லாமல் போய்விட்டது.

இதனால்தான் மக்கள் அவர்கள் பிரச்சினை மீது
போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதுதான் உண்மை.

அவர்கள் வலிமை மிக்கவர்களாகவும்,
உயிருக்கு அஞ்சாத மனப்பான்மை
கொண்டவர்களாகவும் இருப்பதால்
அவர்களை நாட்டில் உள்ள சமூக விரோதிகள்
தங்கள் தீய நோக்கங்களை
நிறைவேற்றிக்கொள்ள அவர்களை
பயன்படுத்திகொள்கின்றனர்

எனினினும் இந்த உலகம் தோன்றிய காலம்தொட்டு
இந்த தொழிலில் ஈடுபட்டுவரும்
மீனவ சமுதாய மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து
அவர்கள் பாதுகாப்பாக தங்கள் தொழிலில் ஈடுபடவும்
நிம்மதியாக வாழவும் இறைவனை பிரார்த்திப்போம்.

2 comments:

 1. இந்த பிரச்சனை என்று தீருமோ...?

  கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை...
  உறவைக் கொடுத்தவர் அங்கே...
  அலை கடல் மேலே அலையாய் அலைந்து
  உயிரைக் கொடுப்பவர் இங்கே...
  வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
  கடல்தான் எங்கள் வீடு (2)
  முடிந்தால் முடியும்... தொடர்ந்தால் தொடரும்...
  இதுதான் எங்கள் வாழ்க்கை...
  இதுதான் எங்கள் வாழ்க்கை...

  கடல் நீர் நடுவே பயணம் போனால்...
  குடிநீர் தருபவர் யாரோ...?
  தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
  துணையாய் வருபவர் யாரோ...?
  ஒருநாள் போவார்... ஒருநாள் வருவார்...
  ஒவ்வொரு நாளும் துயரம் (2)
  அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை
  ஊரார் நினைப்பது சுலபம்...
  ஊரார் நினைப்பது சுலபம்...

  தரை மேல் பிறக்க வைத்தான் -
  எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்...
  கரை மேல் இருக்க வைத்தான் -
  பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான்...
  தரை மேல் பிறக்க வைத்தான்...

  திரைப்படம் : படகோட்டி

  நன்றி ஐயா...

  ReplyDelete
  Replies
  1. துன்பத்திற்கும் துயரத்திற்கும்
   இடையே இருக்கும்
   இடைவெளியில்தான்
   மனித குலம் இன்பமாக வாழ
   கற்றுக்கொண்டிருக்கிறது .

   அருமையான பாடல் வரிகள்
   அருமையான் இசை

   இந்த உலகம் உள்ளவரை அதன்
   தாக்கம் ஒவ்வொரு
   தமிழனின் நெஞ்சில்
   நிறைந்து சோக கீதம்
   இசைத்துக்கொண்டிருக்கும்

   இந்த பதிவை போட
   தூண்டியதற்கு
   ஒரு பின்னணி உண்டு .

   என்ன என்பதை உங்களால்
   ஊகிக்கமுடியுமா?

   Delete