Tuesday, December 11, 2012

அனகோண்டா பாம்பு


வால்மார்ட்



வால்மார்ட் நம் சுதந்திர இந்தியாவை தந்திரமாக
அனகோண்டா பாம்பு போல் விழுங்க
மேலை நாடுகள் தீட்டும் திட்டம்

வழக்கம்போல் இந்தியாவிர்க்கு
தங்கள் கட்சிதான் சுதந்திரம் பெற்று தந்தது
என்று தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும்
 நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக
 ஊழலில் சிக்கி அடாவடி அரசியல் நடத்திகொண்டிருக்கும் ஒரு கட்சி அறிவித்த இந்த வால்மார்ட் பிரச்சினையை எதிரி கட்சிகளும்,உதிரி கட்சிகளும் எதிர்ப்பதுபோல் நாடகமாடி மக்களின் வரி பணத்தைவீணடித்துக்கொண்டிருக்கின்றன.

அன்று இந்தியாவை நம் நாட்டிற்கு
வியாபாரம் செய்ய வந்த
கிழக்கிந்திய கம்பனி மலைப்பாம்பு
ஒரு பெரிய மானை சிறிது சிறிதாக
விழுங்கியது போல்
சிறிது சிறிதாக நம் நாட்டை பிடித்து,
அரசை நிறுவி, மக்களிடையே
அவ்வப்போது கலவரங்களை தூண்டி
ஒன்றாய் வாழ்ந்த மக்களை ஜாதி,மதம்,
இன அடிப்படையில் பிரித்து
நம்மை அடிமைபடுத்தினர்.

பலகோடி பேர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து
பெற்ற சுதந்திரத்தை மொத்தமாக ஒரேஉத்திரவில்
தாரை வார்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இனி மக்கள் அவர்கள் கொடுக்கும்
பொருட்களைத்தான் வாங்கவேண்டிவரும்.
துவக்கத்தில் குறைந்த விலைக்கு விற்கப்படும்
பொருட்கள் நம் கண்ணுக்கு
தெரியாமல் விலை ஏறி கொண்டே போகும்
பெட்ரோல் போல் ,எரிவாயு போல், தங்கம் போல்

நம் நாட்டு தொழில்,கலாச்சாரங்கள்,
அடித்தள மக்கள் வாழ்வு
எல்லாம் அழியப்போகிறது.

இவர்களை யாரும் எதிர்க்கமுடியாது.
ஏனென்றால் அவர்களுக்கு
ஆளும் அரசுகளின் ஆதரவு இருக்கிறது.

அரசுகள் தேர்தலின் போது வழக்கம்போல்
 இலவசங்களை அறிவித்து
மக்களை விலைக்கு வாங்கிவிடும்
ஏனென்றால் அவர்களிடம் பணம் இருக்கிறது.

வழக்கம்போல் உழைப்பவன்
உழைத்துக்கொண்டு
அவன் வயிற்ரை கழுவவேண்டும்
அவர்கள் நடைபாதையில் உறங்கவேண்டும்.
ஏனென்றால் வீட்டு வாடகைகள் பல ஆயிரங்களை தாண்டிவிட்டன.வீடுகளின் விலைகளோ
லட்சங்களிலிருந்து கோடிகளை எட்டிவிட்டன

இந்திய மக்களிடம் ஒற்றுமை கிடையாது.
அவர்கள் இடையே கணக்கிலடங்கா வேற்றுமைகள்
இனி அவர்களை ஒன்று திரட்டி போராடுவது மிக கடினம்

ஏனென்றால் பெரும்பகுதி மக்களுக்கு
தினசரி வாழ்க்கையை நடத்துவதே
பெரும்பாடாக இருக்கிறது.

இனி கடவுள் விட்ட வழி

வாழ்க ஜனநாயகம்.


No comments:

Post a Comment