Sunday, January 6, 2013

மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்


மாதர்தம்மை இழிவு செய்யும் 
மடமையை கொளுத்துவோம்

மாதர்(தம்மை )இழிவு செய்யும் மடமையை 
கொளுத்துவோம் என்றான் பாரதி சென்ற நூற்றாண்டிலேயே 

ஆனால் பெண்கள் மீதான ஆண்களின் (பெண்களையும் சேர்த்துதான் )பார்வை அன்றும் மாறவில்லை இன்றும் மாறவில்லை. 

ஒரு சம்பவம் நடந்துவிட்டால் அதுவும் ஊடகங்களின் 
உதவியால் விளம்பரப்படுதப்பட்டால் உலகமே 
கொந்தளிக்கிறது. சில வாரங்களுக்கு. 

சில மாதங்களுக்கு முன் அஸ்ஸாம் மாநிலத்தில்
நடந்த சம்பவம் அப்படியே அமுங்கி போய் விட்டது.

கற்பழிப்பு சம்பவங்கள் இல்லாத ,பெண்களை இழிவு படுத்தும், சிறுமைபடுத்தும், கொடுமைபடுத்தும் காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் உண்டா?அல்லது பத்திரிகைகள் உண்டா,தொலைகாட்சி தொடர்கள் உண்டா? என்றால் கேள்விக்கு இல்லை என்ற பதில் தான் வரும்.

அரசு முதலில் இது போன்ற காட்சிகளுக்கு முழு தடை விதிக்கவேண்டும். 
ஆபாச வசனங்கள், பாடல்கள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும். 

ஆணும் பெண்ணும் சமம் என்ற உணர்வினையும், பெண்கள் போக பொருட்கலல்லர் என்ற உணர்வினையும் சிறு வயதிலிருந்தே பள்ளியில் போதிக்கவேண்டும். 

போதிக்கும் ஆசிரியர்களும், ஆளும் வர்க்கமும் இந்த நெறியை கடைபிடிக்கவேண்டும்.

அதை விடுத்து சட்டங்களை இயற்றுவதும், போராட்டங்கள் நடத்துவதும் எந்த பலனையும் அளிக்க போவதில்லை.

ஒழுக்க கல்வி பள்ளி கல்வி பாடத்தில் இடம் பெறவேண்டும்
ஒழுக்கம் கெட்டுவிட்டதுதான் இத்தனை சீர்கேடுகளுக்கும் காரணம்
.
தவறு செய்யும் லட்சக்கணக்கான் அயோக்கியர்கள் நம் நாடெங்கும் பரவியிருக்கிறார்கள். ஏதோ ஒரு சிலரை தண்டித்தால் மட்டும் சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்பட்டுவிடும் என்பது பகல் கனவு. 

பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை 
பல நேரங்களில் அவர்களை வேலிகளே சூறையாடுகின்றன. 

திருவள்ளுவரின் குள்-ஒழுக்கத்தை உயிரைப்போல 
பேணவேண்டும். இல்லாவிடில் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கமுடியாது.  


1 comment:

  1. //ஒழுக்க கல்வி பள்ளி கல்வி பாடத்தில் இடம் பெறவேண்டும்
    ஒழுக்கம் கெட்டுவிட்டதுதான் இத்தனை சீர்கேடுகளுக்கும் காரணம்.//

    உண்மைதான். முன்பெல்லாம் நீதி போதனை வகுப்புகள் கட்டாயமாய் இருந்து வந்தது. இப்போது அதை எல்லாம் எடுத்துவிட்டார்கள். அதோடு பல பள்ளிகளில் கடவுள் வாழ்த்தும் கிடையாது. :(
    .

    ReplyDelete