Wednesday, February 15, 2012

குழந்தையை முறையாக வளர்க்க தயாராக இல்லாத ஆணும் பெண்ணும் எதற்காக குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்?

குழந்தையும் தெய்வமும் 
கொண்டாடும் இடத்திலே 
என்று ஒரு பழமொழி உண்டு.

ஆனால் அது இன்று 
ஏட்டளவில்தான் இருக்கிறது
 
காமத்தின் மிகுதியால் ஆசைவயபட்டு 
தகாத உறவு கொண்டு ஆணும் பெண்ணும் 
கருத்தரித்து சமூகத்திற்கு பயந்து கருவை கலைப்பதும்
குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் வீசி எறிவதும் 
இன்று அன்றாட  செய்திகளாகிவிட்டன 

போலியாக அன்னையர் தினம் கொண்டாடுவதும் 
மழலையர் தினம் கொண்டாடுவதும் 
இன்று உலகெங்கும் வணிக நோக்கத்திர்க்கன்றி 
வேறெதற்கு என்று புரியவில்லை?

நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் 
வாழ்வில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக
கொண்டு தாய்ப்பால் குடிக்கும் நிலையிலேயே 
குழந்தை காப்பகங்களிலே குழந்தைகளை விடுவதும் 
மழலையர் பள்ளிகளில் சேர்த்துவிட்டு
சென்றுவிடுவதும் இன்றைய மேற்கத்திய 
கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள்
 
அடித்தட்டு மக்கள் பிழைக்க வழியில்லாமல் 
தங்கள் குழந்தைகளையும் படிக்க அனுப்பாமல் 
வேலைக்கு அனுப்பி குழந்தைகளின் வாழ்க்கையையும் 
எதிர்காலத்தையும்  நாசமாக்குகின்றனர்

குழந்தை தொழிலாளர்கள் சட்டம், 
கட்டாய கல்வி உரிமை சட்டம் 
போன்றவை ஏட்டளவில்தான் உள்ளன

குழந்தையை முறையாக வளர்க்க தயாராக
இல்லாத ஆணும் பெண்ணும் எதற்காக 
குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்?
 
அவர்களுக்கு அவர்களை இளமைதான் முக்கியம்
அல்லது வசதியான வாழ்க்கைதான்  முக்கியம்  என்றால்
கருத்தடை  செய்து கொள்ள வேண்டியதுதானே?

சமூக விரோதிகள் குழந்தைகளை கடத்தி 
அவர்களை சித்திரவதை செய்து அவர்களின் வாழ்க்கையை சிதைத்து
சிறு வயதிலேயே அவர்களை சமூக விரோதிகளாகவும்,
பிச்சைகாரர்களாகவும் மாற்றும் அளவிற்கு
இன்றைய சமுதாயம் குழந்தைகள் மீது 
அக்கறையில்லாமல் போய்விட்டது மிகவும் வருத்தர்க்குரியது 

பூ போன்ற குழந்தைகளின் மனதிலே இன்று ஏக்கமும்
வெறியும் புகுந்து கொண்டு அவர்களை ஆட்டி படைத்து 
கொண்டிருப்பதின் விளைவுதான் ஒரு சிறுவன் ஆசிரியரை 
கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்று விட்டது

இந்த நிலைக்கு அவன் எப்படி பொறுப்பு வகிக்கமுடியும்?
இன்று எதை எடுத்தாலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும்
தங்கள் எண்ணங்களைதான் அவர்கள் மீது 
திணிக்கிறார்களே தவிர அந்த குழந்தைகளின் எண்ணத்தை 
யாரும் சட்டை செய்வதில்லை 
.
குழந்தைகளுக்கு  தொலைகாட்சி ஊடகங்கள் மற்றும் திரைப்படங்கள் 
நல்ல செய்திகளையும் ஒழுக்க நெறிகளை  கொண்டு செல்லாமல் 
கொலைவெறியும், ஒழுக்க கேடும் ,சககிக்கமுடியாத அளவிற்கு  வன்முறை
காட்சிகள் மற்றும் காமத்தை தூண்டும்,போதை, களவு போன்ற 
தீய செய்திகளை அவர்களின் கருவிலிருக்கும் பருவத்திலிருந்தே 
அளித்து வருவதால் நாளைய சமுதாயம் நாசமாகி போய் கொண்டிருப்பதை 
யாரும் உணரவில்லை

இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தின் வாரிசுகள் என்பதை மக்களும், அரசும்
உணரவில்லை 
சமூகத்தில் ஒழுக்கம் அழிந்தால் யாரும் மகிழ்ச்சியாக வாழமுடியாது 
இப்போதே விழித்து கொண்டால் நல்லது 

No comments:

Post a Comment