Monday, July 30, 2012

ஆடியிலே அதிரிஷ்டக்காற்று

ஆடியிலே அதிரிஷ்டக்காற்று


என்று எங்கு பார்த்தாலும் கண்ணை பறிக்கும் விளம்பரங்கள்

கண் விழித்திருக்கும் நேரம் முழுதிலும் இசை
என்ற பெயரில் காதை   பிளக்கும் நாராசமான ஓசை

போதாக்குறைக்கு அம்மன் பக்தி பாடல்கள் என்ற பெயரில்
இசைகருவிகளின் இரைச்சலும் அதனூடே
ஒலிக்கும் பாடகர்களின் பாடல்களும்

அது சரி .யாருக்கு ஆடியிலே   அதிரிஷ்டக்காற்று  வீசுகிறது?

மக்களுக்கா அல்லது அவர்களை மூளை சலவை செய்து தங்களிடம் தேங்கியுள்ள சரக்குகளை தந்திரமாக மக்கள் தலையில் கட்டி கோடி கோடியாய் கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளுக்கா?

பெரும்பாலான வீடுகளில் ஏற்கெனவே துணிமணிகள் நிரம்பி வழிகின்றன
கையால் துணி துவைத்த காலம் போய் இன்று வீட்டு வீடு வாஷிங் மெஷின்கள் இடத்தை அடைத்துக்கொண்டு விட்டன .

போதாக்குறைக்கு மின்சாதன பொருட்கள் வீடுகளில் பயன்படுதபடுகிறதோ இல்லையோ வீட்டில் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கின்றன

தங்க நகை வீட்டில் வைத்திருந்தாலும் அதை வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு இல்லை ,அதை வைத்திருப்பவர்களுக்கும் சேர்த்துதான் 
அதை அணிந்து வெளியில் சென்றால் ஒன்று நகையை பறி கொடுக்கவேண்டும் அல்லது உயிரையும் அதனோடு சேர்த்து பறிகொடுக்க வேண்டும் 

இவ்வாறிருக்க சில கோடி ரூபாய்கள் செலவில் தூண்டில் போட்டு பல கோடிகளை  அநாயாசமாக அள்ளி குவிக்கும் வியாபாரிகளின் விளம்பர மாயையில் மயங்கி, அவர்கள் விரிக்கும் மோசடி வலையில் சிக்கி மேலும் மேலும் பொருட்களை வாங்கி குவித்து பெரும் கடனாளிகளாக ஆகும் இந்த மூட ஜனங்களை என்னவென்று சொல்வது?

பாடுபட்டு உழைத்து சேர்த்த காசை வீணாக்காதீர் 
தேவைப்பட்டால் மட்டுமே பொருட்களை வாங்குவீர்

மின்கட்டணம் உயர்ந்துவிட்டதால் மின்சாதன பொருட்களின் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருப்பீர்

தங்கநகை தற்காலத்தில் உயிருக்கு பகை .என்பதை மறவாதீர். 

கைபேசிகளின் இரைச்சலால் காதுகள் செவிடாய் போன மக்களுக்கு 
கணினி, தொலைகாட்சி பார்த்து பார்த்து குருடாய் போன மக்களுக்கு 
விளம்பரங்களை அப்படியே உண்மையென நம்பும் அப்பாவிகளுக்கு 
அரசு மதுக்கடைகளில் தங்கள் கைகாசை தொலைக்கும் குடிமக்களுக்கு 
இந்த செய்தி போய் சேருமோ?
கேள்விக்குறிதான்!


2 comments:

  1. அருமையா சொல்லி இருக்கீங்க...

    //// குடிமக்களுக்கு இந்த செய்தி போய் சேருமோ...? கேள்விக்குறிதான்....! //// உண்மை.....

    நன்றி ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD அவர்களே.
      ஊதுகிற சங்கை ஊதிவிடுவோம்.
      விழித்து கொள்பவர்கள் விழித்துக்கொள்ளட்டும்
      மதி மயங்குபவர்கள் விதி வழி செல்லட்டும்.

      Delete