Tuesday, July 31, 2012

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை
இது ஒரு படத்தின் பெயர்.

பயணங்கள் முடிவதில்லை .எந்த பயணம்?
இன்று இது ஒரு கேள்விக்குறியாகிவிட்டது

கல்வி பயில பள்ளி செல்லும் குழந்தைகள்
பள்ளியிலிருந்து உயிருடன் வீடு திரும்புமா என்பது
இன்று கேள்விகுறியாகிவிட்டது

மரணம் அவர்களுக்கு எந்த உருவத்தில் வரும் என்று
ஜோசியர்களால் கூட கணிக்க முடியாது

ஆ(சிறி )சிரியர்களால் பாலியல் தொல்லை, சக மாணவர்களின்
வெறித்தனம் ,சாதி பாகுபாடு ,என பலவிதமான
காரணங்களை சொல்லலாம்

சிரித்த முகத்துடன் பள்ளி சென்ற குழந்தை
மரித்து விட்ட செய்தி கேட்டுதுயரத்தில் மூழ்கும் பெற்றோர்களின்
எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது

இந்த அவல நிலைக்கு யார் காரணம் ?

அரசு அதிகாரிகளா,வாகன ஓட்டுனர்களா பள்ளி நிர்வாகமா
அல்லதுபொறுப்பற்ற இந்த சமுதாயமா?

இவை அனைத்திற்கும் மூல காரணம் ,லஞ்சம், அலட்சிய போக்கு 
மக்களின் மனதில் மூடிக்கிடக்கும் மனித நேயமற்ற தன்மை ,ஒருவரை சுரண்டி பிழைக்கும் அற்ப மனப்பான்மை ,பேராசை,வடிகட்டிய சுயநலம் 
தன்னை சுற்றி நடக்கும் அனைத்து அநியாயங்களை 
கண்டும் காணாமல் சென்று கொண்டிருக்கும் சமூகம்தான் காரணம் 

அசம்பாவித சம்பவம் நடந்தால் பொது சொத்துக்களை அழித்து ஆத்திரத்தை 
தீர்த்துக்கொண்டு மீண்டும் அவரவர் வேலையை பார்க்க போகும் அநாகரீகமான போக்கு 

தன்னுடைய கோரிக்கைகள் நிறைவேற அப்பாவி உயிர்களை கடவுளுக்கு உயிர்பலி கொடுக்கும் மக்கள் இருக்கும்வரை 
சமுதாய கோரிக்கைகள் நிறைவேற மனித சமுதாயம் தன் ஒரு பகுதியினரை தாரை வார்த்துதான் ஆகவேண்டும் என்பது விதி.

ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தும்வரை நல்லது நடக்க வாய்ப்பில்லை
.
லஞ்சத்திற்கு அனைவரும் உடந்தையாக இருந்துகொண்டு லஞ்சத்தை ஒழிப்பது பற்றி போராட்டம் நடத்தும் வாய் சொல் வீரர்களை கொண்டது தற்காலத்திய மக்கள் கூட்டம்.

மாறுவதற்கு மனம் வேண்டும்
இல்லையேல் தினம் தினம் இதுபோன்ற செய்திகள் நம் நெஞ்சை உலுக்கிகொண்டிருக்கும். 

1 comment:

  1. இந்தக் காலத்திற்கேற்ற கருத்துள்ள கவிதை...
    அருமையாக முடித்துள்ளது சிறப்பு...
    நன்றி...


    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete