Saturday, November 19, 2011

வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டு

இன்றைய உலகில்
பணக்காரனும் மகிழ்ச்சியாக இல்லை
ஏழையும் மகிழ்ச்சியாக இல்லை
ஆனால் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்னால்
இந்த நிலை இல்லை
மக்கள் அவரவருக்கு கிடைத்த வாழ்க்கையை
இறைவன் அளித்த பரிசாக கொண்டு
மன நிம்மதியுடன் வாழ்ந்து வந்துள்ளனர்
இக்காலத்தில் மக்கள் பிறரை போல்
வாழ வேண்டும் என்று பேராசைப்பட்டு
குறுக்கு வழிகளில் தகுதிக்கு மீறி
செயல்களை செய்து அதன் விளைவுகளால்
வாழ் நாள் முழுவதும் நிம்மதியின்றி வாழ்கின்றனர்
செல்வந்தனாக வேண்டுமென்று உழைத்து
உழைத்து வாழ்நாளில் பாதியை எந்த
இன்பங்களையும் அனுபவிக்காமல்
வீணடிக்கின்றனர்.செல்வந்தனாகும்போது
உடல்நலம்,மனநலம் கெட்டு
துன்பத்தில் மீதி வாழ்க்கையை கழித்து
மனநிம்மதிஇன்றி மடிகின்றனர்.
இதை விடுத்து வாழ்க்கையை அதன் போக்கில்
எதிர்கொண்டு திருப்தியாக மகிழ்ச்சியாக
வாழ பழகிக்கொள்ள வேண்டும்

Friday, November 18, 2011

LIFE is not for ENTERTAINMENT only

LIFE is not for ENTERTAINMENT only
It should be utilised to attain ENLIGHTENMENT also

But what is going on?
Total mankind excluding certain people are always
wasting their precious life in different types of
entertainment during waking hours

A section of the people are wasting their blood
throughout their life to entertain others
Crores of money is wasted like this all over the world
Nobody cares for the poor and downtrodden

Capitalists are exploiting their workers
and amassing wealth disproportionate to their needs
thus depriving crores of people dying of hunger

The people in power are harassing
the unharmed ,poor,illiterate people
for their selfish ends

certain people are spreading hatred
among everybody they come across
which creates disharmony among masses
in turn among nations
The people must realize this
and try to change their attitude towards the fellow beings

The people should mend their evil intentions
and become a good people otherwise
the GOD WILL END THEIR stay in this world
abruptly without giving any chance to save them.

Unless and untill people starts loving
everybody and helps the poor and needy
no change can be expected in the near future

Sunday, November 13, 2011

மதங்களும் அதன் கோட்பாடுகளும்

எல்லா மதங்களும் இறைவனை அடையும் வழியை காட்டுகின்றன
உலகிலே உள்ள வெவ்வேறு பகுதிகளில் வாழும் வாழ்க்கை நடைமுறைக்கேற்ப
மதங்களும் அதன் கோட்பாடுகளும் வரையறுக்கபட்டுள்ளன
இஸ்லாம் இறைவனே அனைத்திற்கும் மேலானவன் என்றும் அவனை எதனுடனும் ஒப்பிடக்கூடாது என்றும் அனைவரும் சகோதரர்கள் என்றும் கூறுகிறது
கிருத்துவ மதமோ இறைவனை நம்புங்கள் பாவம் செய்யாதீர்கள்,தனக்கு தீமை செய்பவனையும் மன்னியுங்கள் ,தன்னைப்போலவே பிறரையும் நேசியுங்கள் என்று சொல்கிறது
புத்த மதம் புலனடக்கம் தேவை,துன்பங்கள் நீங்க ஆசைகளை விட்டொழிக்கவேண்டும்,பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமலிருக்க வேண்டும் என்று சொல்கிறது
இந்துமதம் அன்பே இறைவன் அனைத்தும் இறைவனால் உண்டாக்கப்பட்டது,அனைத்து உயிர்களிளிலும் இறைவன் வசிக்கின்றான் உயிர்களுக்கு தொண்டு செய்து வாழுங்கள்.இறைவனிடம் பக்தி செய்யுங்கள் பலன் கருதாது உழையுங்கள்
இவ்வாறு மதங்களின் நோக்கம் பிற உயிர்களிடம் அன்பு காட்டி ,நன்மைகளே செய்து,இறைவனிடம் பக்தி செய்து மீண்டும் இறைவனிடமே சென்று அயிக்கியமாவதுதான்.
ஆனால் இன்று உலகில் நடப்பது என்ன/
அனைத்தும் நேர்மாறாக நடக்கின்றன
அரசுகள் மதத்திலுள்ள நல்ல நெறிகளை கடைபிடிக்காமல் தங்கள் மதங்களை பரப்புவதில் தர்மத்திற்கு புறம்பான வழிகளில் மக்களை துன்புறுத்தி கொடுமைபடுதிவருகின்றன
எவரும் மதம் போதிக்கும் தத்துவங்களை நடைமுறையில் அனுசரிப்பதில்லை
அதனால்தான் அகந்தை கொண்டு அன்பில்லாமல் ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு ஈசல் பூச்சிகள் போல் கொத்து கொத்தாக மடிகின்றனர்
இந்நிலைமை மாறி இவ்வுலகில் மானிடர்கள் பிறருக்கு தீங்கு செய்யாமல் அன்புடன் வாழ
இறைவன்தான் நல்ல புத்தியை வழங்கவேண்டும்

Tuesday, November 1, 2011

பிறர் மீது நமக்கு ஏன் வெறுப்பு வருகிறது?

பிறர் மீது நமக்கு ஏன் வெறுப்பு வருகிறது?
சிலர் மீது நாம் ஏன் காரணமில்லாமல் வெறுப்பை காட்டுகிறோம்?
முதல் காரணம் மற்றவரால் நமக்கு துன்பம் விளையுமோ அல்லது
நம்முடைய சுதந்திரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஒரு காரணம்
உலகம் பலவிதம்.மற்றவர்களால் நம்முடைய உயிரையோ அல்லது
உடைமைகளையோ இழந்து விடுவோமோ என்ற ஒரு பயமும்
காரணம் .உலகத்தோடு அனுசரித்து போகும் சகிப்புத்தன்மை
குறைபாடும் ஒரு காரணம்.
நம்மிடம் உள்ளதை இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ள மறுக்கும் நம்
சுயநலமும் ஒரு காரணம்
நம் கருத்தை பிறர் மீது திணிப்பதும் பிறர் கருத்துகளை
ஏற்க மறுப்பது மட்டுமல்லாமல் கேட்கவே மறுக்கும் நம் அகந்தை.
எல்லோரின் அன்பையும் எதிர்பார்க்கும் நாம் அதை பிறருக்கு வழங்க
மறுப்பதும் ஒரு காரணம்.
நாம் நன்றாக வாழும்போது
பிறரும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைக்க மறுப்பதும் ஒரு காரணம்.
இப்படியாக பல காரணங்களை சொல்லிகொண்டே போகலாம்.
எது எப்படியிருந்தாலும் நாம் வாழ்வில் பிற உயிர்கள் மீது அன்பு செலுத்த
கற்றுகொள்ளாவிடில் நாம் வாழ்க்கை துன்பமயமாகவும்
அமைதியற்றதாகிவிடும் என்பது உண்மை. முன்பின் தெரியாதவர்களிடம் காட்டும்
அன்பை,மரியாதையை நம் பெற்றோர்களிடமோ,கூட பிறந்தவர்களிடமோ,உறவினர்களிடமோ, அண்டை வீட்டினரோடோ காட்டுவதில்லை. இந்த பண்பு முதலில் வீட்டிலிருந்துதான் தொடங்கவேண்டும். முடிவில் நம்முடைய பகைவர்களிடம் அந்த அன்பு வெளிப்படும். சுயநலம் இல்லாமல்
அனைவரையும் அனுசரித்து அரவணைத்து செல்பவன்தான் தலைவனாக விளங்குகிறான்.
மற்றவர்களால் விரும்பப்படுகிறான். , மதிக்கப்படுகிறான்.
அனமே சிவம் என்றும் அன்பே சக்தி என்றும் அன்பே கடவுள் என்றும்
அனுதினமும் கடவுளை போற்றி பாடினாலும் அதை நடைமுறை
வாழ்க்கையில் கடைபிடிக்காத வரையில் உண்மையான இறைவழிபாடு
என்று கொள்ள முடியாது. நாமும் முயற்சி செய்வோம்.

Monday, July 5, 2010

மாலவன் அந்தாதி

வாணி துதி
கல்லாசனத்தில் வீற்றிருந்து காலத்தால் அழியா
கல்வி செல்வம் தந்தருளும் கலைவாணியே
பரமனின் புகழ் பாடும் இந்நூல் பக்தர்களின்
நாவில் என்றும் நடமிட வரமருள்வாயே

ஆனைமுகன் துதி
ஆனைமுகனே உந்தன் ஆதரவின்றி
யாது நிகழும் இவ்வுலகில் என்பதை
அறிந்தே யான் எப்போதும் உன்னை
என் சிந்தையில் வைத்து வணங்குகிறேன்




மாலவன் அந்தாதி

நூலின் நோக்கம்
பக்தியோடு பாராயணம் செய்வீர் பரமனின்
புகழ் பாடும் இந்நூலை குறையொன்றுமில்லா
கோவிந்தனை நினைவில் கொண்டேயன்றி
நூலில் குறை காண்பதை விடுத்து

பக்தனின் இலக்கணம்
தலைக்கனமின்றி எல்லா உயிர்க்கும் பணிவோடு
சேவை செய்தே தன்னிடம் உள்ளதனைத்தையும்
அனைவரோடும் பகிர்ந்துகொண்டு எந்நேரமும்
இறைவனையே நினைந்து அவருக்காகவே வாழ்பவன்

ஹயக்ரீவன் துதி
அவனியில் பிறந்த அனைவரும் துன்பம்
நீங்கி இன்புற்று வாழவே ஹரியின் புகழ் பாடும்
இந்நூலை செய்திட்டான் ஞானமும் ஆனந்தமும் ஒருங்கேயாகிய
ஹயக்ரீவ பெருமான் என்னை தன கருவியாக்கி

வாணிக்கருள் செய்த ஹயக்ரீவா
நீரில் நில்லாதோடும் மீன்கள் போல்
அல்லாது என் மனதினை உன் திருவடியில்
நிலை நிறுத்திடுவாய் ஏதும் கல்லாமலே
நாரத பகவான் துதி
பக்திக்கு இலக்கணம் வகுத்த நாரத
பகவான் திருவடி வணங்கியே இந்நூலை
ஓதுவோர் அன்புருவான ஹரியை அறியும்
அருளினை பெறுவோர் எளிதாக
கருவிலிருக்கும்போதே திருவடிவான
திருமகள் நாயகன் நாராயணனின்
திருமந்திரத்தினை பிரகலாதனுக்களித்த
நாரத பகவானை வணங்கிடுவோம்
மாலவன் அந்தாதி
1.எதையுமே அறியாதவன் யாதவ
திலகமாகிய கண்ணனிடம் பக்தி
செய்தால் போதும் எளிதாக அருளை
பெற்றிடுவான் பரமாத்மாவாகிய கண்ணனிடம்
2.அவனிடம் பக்திகொண்டு எப்போதும்
அவன் நினைவில் வாழ்பவர்கள் மீண்டும்
இவ்வுலகில் பிறந்து உழன்று முடிவில்
அடைய வேண்டாம் மரணத்தை
3.மரணத்தை நினைத்து வீணே
கலங்குதல் வேண்டா .மனம் தளராமல்
ஒவ்வொரு கணமும் பக்தியுடன்
பாடு பகவானின் நாமங்கள் ஆயிரம்
4.ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடன்
குடை பிடிக்க சிறையில் அவதரித்து
அடியவர்களை காக்க வந்த கண்ணனின்
புகழை பாடுவதுதான் பக்தனுக்கழகு

5.அழகுத் தெய்வமாம் கண்ணன் தன்னை
நினைப்போருக்கு அருள் செய்ய காத்திருக்க
அவனை விடுத்து மனமே நீ ஏன்
நாடுகிறாய் பொன்னும் பொருளும்
6.பொன்னும் பொருளும் வேண்டா
நனவிலும் நினைவிலும் கண்ணனையே
காணும் கோபிகைகளைப்போல் அவனையே
நினைந்து பக்தி செய்பவர்களுக்கு
7.பக்தி செய்பவர்களுக்கு பரமபதத்தையே
தந்தருள காத்திருக்கும் பரந்தாமனை
சிந்தனை செய்யாமல் காலம் கடத்துவோர்
காலனுக்கி இரையாகி காணாமல் போவார்.
8.போவார் பல நாடுகள் பொன் பொருள் தேடி
தொலைப்பார் பெரும்பகுதி தன வாழ்வில்
உயிருக்குயிராய் விளங்கும் அந்த உத்தமனை
சிந்தனை செய்யார் ஒரு போதும்
9.போதும் இவ்வுலக மாயையில் சிக்கி உழன்றது
கோகுலத்தில் மாடு கன்று மேய்த்து கல்வி அறிவில்லா
இடையரையும் ஆட்கொண்ட மணிவண்ணனை
நினைப்பவர் மாயையில் சிக்கார் ஒரு போதும்
10.ஒருபோதும் வாரா நம்முடன் இவ்வுலகில்
உள்ளவை எவையும் மறலி நம் உயிரைப்
பறிக்கும் முன்பே நாடுங்கள் பிரம்மனும்
ஆராதித்த பேரருளாளனின் திருவடிகளை
11.திருவடிகளை நமக்கு காட்டவல்ல
பெரிய திருவடியாம் கருடனையும்
சிறிய திருவடியாம் அஞ்சனை மைந்தனையும்
பக்தி செய்தால் போதும் தோன்றும் வழி
12.வழி காட்ட கருணை உள்ளத்துடன்
பரமனிடமிருந்து வந்தவர்களே
இறை அடியார்கள் அவர்கள் காட்டும்
பாதையை நாடி நலம் பெறுவீர்
13.பெறுவீர் பெரும்பேறு திருபெரும்புதூர்
வள்ளல் ஸ்ரீராமானுஜன் திருவடியை வணங்கி
எல்லோரும் உய்ய நாராயண மந்திரத்தை
உபதேசித்த அந்த கருணை தெய்வத்தை
14.தெய்வத்தை இகழும் அறிவிலிகள்
தாமரையில் தேனிருக்க அதை பருகாமல்
பருகவந்து பூ மேல் அமரும் வண்டுகளை
பிடித்து தின்னும் தவளைகளன்ரோ




Thursday, July 1, 2010

என் எண்ணங்களை
என் மன சிறையிலிருந்து
விடுதலை செய்ய போகிறேன்
அவைகள் இந்த வானத்தில்
சுதந்திரமாக பறந்து திரியட்டும்