Monday, February 27, 2012

கல்வி முறையில் மாற்றம் தேவை


கல்வி முறையில் மாற்றம் தேவை

கல்வி முறையில் மாற்றம் தேவை

பள்ளியில் படிக்கும் மாணவன் 
ஒருவன் தன் ஆசிரியரை 
கொடூரமாக கொலை செய்கின்றான்

கண்டிக்கும் ஆசிரியரை 
மாணவன் தண்டிக்கின்றான்

இந்த நாடு எங்கே செல்கிறது?

ஒரு பள்ளிக்கூடம் திறந்தால் 
பல சிறைச்சாலைகள் மூடுவிழா 
என்று மார்தட்டுகின்றனர் கல்வியாளர்கள்
ஆனால் இன்று குற்றவாளிகள் 
பள்ளிகளில் அல்லவோ
உருவாகிறார்கள்
இதற்க்கு யார் பொறுப்பு ?

கல்வியை வியாபாரமாக்கிய 
கல்வியறிவற்ற  பண முதலைகளா?

பள்ளிக்கு அனுப்பியவுடன் தங்கள் கடமை
முடிந்துவிட்டதாக எண்ணும் பெற்றோர்களா?

பாசத்திற்கும் கண்டிப்புக்கும்
வேற்றுமை காண இயலாத 
தாய் தந்தையர்களா?

ஒழுக்கத்தை போதிக்கும்
போதிமரங்கலாகிய
சில ஆசிரியர்கள் ஒழுக்க கேடாக
நடந்துகொள்வதின் விளைவா?

கல்வியின் நோக்கம் அறிவுள்ள
ஒழுக்கமுள்ள,சமுதாயத்தை
 உருவாக்குவதுதான்

ஆனால் நடப்பது பொறாமையும் போட்டியும் 
கொண்ட இயந்திரங்களைத்தான் இன்றைய 
கல்விக்கூடம் உருவாக்கிறது
பொதி மாடு போல்  மூட்டை சுமக்கும்
குழந்தைகள் இன்றைய காலத்தில்
நாம் அனுதினமும் காணும் அவலங்கள் 

ஆடுமாடுகள்போல் கொட்டடியில் அடைத்து 
வண்டிகளில் ஏற்றி சென்று நேரப்படி
 உள்ளே அனுமதித்து நேரப்படி உணவிட்டு 
மீண்டும் நேரப்படி வெளியே விடுவதர்க்கு
பெயர்தான் கல்விசாலைகளோ?

அன்போடு குழந்தைகளை அரவணைத்து 
அறிவு புகட்டும் ஆசான்கள் ஆசிரியர்கள் 
என்ற நிலை மாறி கடுமையாக கண்டிப்பு காட்டி
குழந்தைகள் மனதில் கசப்பை வளர்க்கும் 
கசாப்பு கடைகளா இன்றைய கல்விசாலைகள்? 

கிரகிக்கும் தன்மை குழந்தைக்கு குழந்தை வேறுபடும்
என்பதை அறியாத ஆசிரியர்கள் அவர்களை 
அவர்களை வழிநடத்துவது எப்படி சாத்தியம்?

வெவ்வேறு மனமும் திறனும் கொண்ட குழந்தைகள் 
அனைவருக்கு ஒரே கல்விமுறை பயிற்றுவிப்பது 
எங்கனம் சாத்தியமாகும்?

உலக வாழ்வில் வாழ தேவையான பொது அறிவு 
புகட்டும் அடிப்படையான நடைமுறை கல்வியோடு
அவரவர் விருப்பமான துறைகளில் 
கல்வியளிக்கும் முறை வர வேண்டும்

வெறும் பணம் சம்பாதிக்கும்  
இயந்திரங்களை உருவாக்கும்
காட்டாட்சி தர்பார் கல்வி முறை 
ஒழிக்கப்படவேண்டும்

ஒரே கல்வியை அனைவர் மீதும் திணிக்கும்
சர்வாதிகார முறை உடன் நிறுத்தப்படவேண்டும்

குழந்தைகளின் மனதில் நம்பிக்கை, விடாமுயற்சி
நேர்மை,தோல்விகளை எதிர்கொள்ளும் தன்மை
ஒழுக்கம் சுயமாக சிந்தித்து செயல்படும் பக்குவம் ஆகியவற்றை அடிப்படை குணங்களாக விதைக்கும் வகையில் கல்வி முறை  அமையவேண்டும்  

மாணவர்களின் மனதில் நேர்மறையான எண்ணங்களை 
விதைக்கும் கல்வி முறை உருவாக்கப்படவேண்டும். தீங்கு
பயக்கும் எதிர்மறையான எண்ணங்கள் அகற்றப்படவேண்டும் 

ஒழுக்கமில்லாத சமுதாயம் 
ப்ரேக் இல்லாத வண்டிபோல் 
கண்டபடி ஓடி அனைவரையும் 
கொன்றுவிடும் 

அரசுகள் இனிமேலாவது 
விழித்துகொண்டால் நல்லது
இல்லையேல் காண்பதற்கு 
விழியிருக்காது  

2 comments:

  1. நல்ல பதிவு தோழரே வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே
    வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete