Monday, August 13, 2012

தமிழன் என்று சொல்லடா?

தமிழன் என்று சொல்லடா?
தலை நிமிர்ந்து நில்லடா!
என்று ஒரு கவிஞன் எழுதி வைத்தான் 

ஆனால் இன்று அவ்வாறு எழுத முடியுமா?
இன்றைய தமிழன் எப்படி இருக்கிறான் என்பதை  என்று சற்று சிந்தித்து பார்த்தால் நல்லது 

மக்கள் தொகை சில லட்சங்களே உள்ள நாடுகள் ஒலிம்பிக்கில் தங்க பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளன .
எட்டு கோடி தமிழர்களில் ஒருவனுக்கு கூட ஒலிம்பிற்கு சென்று பதக்கம் வாங்க வக்கில்லை. அரசுகளுக்கும் அக்கறையில்லை 
ஒரு சிறிய அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து ஒரு பெண் அதுவும் ஒரு தாய் ஒரு வெண்கல பதக்கத்தை பெற்று தந்துள்ளாள் .
ஆனால் தமிழ்நாட்டில் வெட்ககேடு. சொல்ல வார்த்தையில்லை.
ஆனால் தமிழர்கள் தங்க நகை மாளிகைகளில் தங்கம் வாங்குவதையே பெருமையாகவும் வாங்கிய தங்க நகைகளை மீண்டும் அடகு வைத்து வயிற்றை நிரப்பும் சாதனை போற்றத்தக்கது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டு சென்ற திருவள்ளுவருக்கு  சிலைகள் வைத்து அழகு பார்த்துவிட்டு அவர் போதித்த உண்மைகளை காற்றில் பறக்க விட்டு பேராசை பிடித்து சிறிதும் கூட சிந்திக்காது நடிகர்கள், நடிகைகள் விளம்பரங்களை உண்மையென நம்பி பாடுபட்டு சேமித்த காசுகளை நிதி நிறுவனங்களிடமும் , ரியல் எஸ்டேட் பேர்வழிகளிடமும் போலி மோசடி பேர்வழிகளிடமும் அவர்கள் தரும் அற்ப ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு u  கொடுத்து விட்டு பல ஆயிரம் முறை ஏமாந்தும் மீண்டும் மீண்டும் அவ்வாறே செய்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு 
கூப்பாடு போடும் சாதனையில் தமிழனை யாரும் மிஞ்ச முடியாது

எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் சுயநல வாதிகள் என்று தெரிந்திருந்தும் ஊழலில் சிக்கியவர்கள் என்று அறிந்திருந்தும் மீண்டும் அவர்களையே நம்பி தங்கள் சக்தியையும் தங்கள், உழைப்பையும்,காசையும் அவர்கள் காலடியில் போட்டுவிட்டு அவர்கள் போடும் இலவச பிச்சைக்காக அலைந்து திரியும் உயர்ந்த குணத்தில் சாதனை எந்த இனத்தால் படைக்கமுடியும்?

நடிகர்கள்,நடிகைகள் பின்னால் சுற்றி திரிந்து தங்கள் வாழ்வை தொலைக்கும் இளைஞர் பட்டாளம் எப்போது திருந்தும்? என்றும் திருந்தாது

ஒழுக்கமும் இல்லை, நல்ல பழக்க வழக்கங்களும் இல்லை. நேர்மை இல்லை நியாயம் இல்லை 
அனைவரிடமும் அனுசரித்து சாதிக்கும் சாமர்த்தியமும் இல்லை 

பழம் பெருமை பேசி ,குடி போதையில் காலம் கழிக்கும் தமிழினம் மீண்டும் தங்களின் போக்கை மாற்றிகொள்ளாமல்  உலக வரலாற்றில்  பெறுவது குதிரை கொம்பு
உண்மையை உணராது கற்பனைகளில் காலம் கழிப்போர் தமிழகத்தில்தான் அதிகம் என்பதுதான் உண்மை.
ஊருக்கு ஒரு சாதி சங்கம்,தெருவுக்கு ஒரு கட்சி தமிழ்நாட்டை பாதிக்கும் எந்த பிரச்சினையிலும் கருத்தொற்றுமை இல்லா போக்கு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போக்கு, சுயநலதிர்க்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழ்த்தரமாக செல்லும் போக்கு.பொறுப்பற்ற தன்மை சுற்றுபுறத்தை பாழ்படுத்தி விட்டு அரசை குறை கூறும் போக்கு தீண்டாமை போன்ற தீய குணங்கள்தான் இன்றைய தமிழினத்தின் வெளிப்பாடுகள். 


1 comment:

  1. /// பழம் பெருமை பேசி ,குடி போதையில் காலம் கழிக்கும் தமிழினம் மீண்டும் தங்களின் போக்கை மாற்றிகொள்ளாமல் உலக வரலாற்றில் பெறுவது குதிரை கொம்பு ///

    இது தான் உண்மையான உண்மை...

    நன்றி... தொடருங்கள்...

    ReplyDelete